ஆலந்தூர், அக்.1- ஆலந்தூர் பகுதி கழக பொறுப்பாளர் க.சிவா ஏற்பாட்டில் 17.09.2023 முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஆலந்தூர் சவுரி தெரு மற்றும் மாதவபுரம் மேற்கு தெரு இணைவில் தந்தை பெரியாரின் விளம்பர திரை வைக்கப்பட்டு, நிகழ்ச்சி குறித்த சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு தந்தை பெரியாரின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.
முன்னதாக பேண்ட் வாத்தியத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத் திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிடர் கழக கொடியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆலந்தூர் பகுதி செயலா ளர் மொழிப்போர் வீரர் ப.குணாளன்(ஆலந்தூர் மேனாள் மாமன்ற உறுப் பினர்) அவர்கள் ஏற்றி வைத்தார்.
கோல்டு டி.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், தி.மு.க), ஆர்.டி.பூபாலன் (பொதுக்குழு உறுப் பினர், திமு.க.),
கலாநிதி குணாளன் (மாவட்ட மாணவர் அணி துணைச் செயலா ளர், தி.மு.க), கே.பாபு குமார் (மாவட்ட பிரதிநிதி, தி.மு.க, மேனாள் மாமன்ற உறுப்பினர்), இரா.கீர்த்திராஜ்(மாவட்ட பிரதிநிதி, தி.மு.க.), கே.பி.முரளி கிருஷ் ணன் (160ஆவது வட்டச் செயலாளர் தி.மு.க.), இ.உதயகுமார் (மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர், தி.மு.க.), பி.எம்.பிருந்தாசிறீ (160ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்) ஆர்.அற்புதராஜ் (இலக் கிய அணி,தி.மு.க.), எ.கதி ரவன்(மாணவர் அணி தி.மு.க.), எம்.கவி (மீனவர் அணி, தி.மு.க.), எஸ்.பாலாஜி (மாணவரணி தி.மு.க.) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாக பங்கேற்றனர்.
தென் சென்னை மாவட்ட கழக தலைவர் இரா. வில்வநாதன், செய லாளர் செ.ர.பார்த்த சாரதி, துணைச் செயலா ளர் கோ.வீ. ராகவன் மற்றும் தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஏற் பாடு செய்த அனைவரை யும் பாராட்டினர்.
No comments:
Post a Comment