சென்னை,அக்.17- போக்சோ வழக்குக ளில் பெற்றோர் மற்றும் உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேனாள் காவல்துறை இயக்குநரான திலகவதியின் மகன் மருத்துவர் பிரபு திலக் மற்றும் அவரது மனைவி ஷ்ருதி ஆகியோர் கருத்து வேறுபாடு காரண மாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது 2 குழந்தைகளும் தந்தை வசம் உள்ளனர். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள் ளது.
கடந்தாண்டு டிச.23 அன்று தாய் ஷ்ருதியின் வீட்டில் இருந்த தனது உடைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரச் சென்ற தனது மகளை ஷ்ருதி திட்டியதாகவும், ஷ்ருதியின் சகோதரர் விஜய் ஆனந்த், பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக வும் பிரபு திலக் வடபழனி காவல் துறையில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் ஷ்ருதிக்கு முன் பிணை வழங்கிய உயர் நீதிமன்றம், விஜய் ஆனந்துக்கு முன்பிணை வழங்க மறுத்து விட்டது. இந்நிலையில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி விஜய் ஆனந்த் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இந்த வழக்கின் விசார ணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக மனுதாரர் தெரிவித்தாலும் காவல் துறையினர் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. காவல் துறையி னரும் மனுதாரருக்கு முன் பிணை வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். திரைமறைவில் ஒளிந்து கொண்டு, தான் ஒரு அப்பாவி என மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.
இது போன்ற போக்சோ வழக்குக ளில் தாய், தந்தை மற்றும் உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம்.
போக்சோ வழக்குகளில் பாதிக்கப் படும் சிறுமிகளின் கண்ணீர் துடைக் கப்பட வேண்டும்.
எனவே மனுதாரருக்கு முன்பிணை வழங்க முடியாது" என மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விஜய் ஆனந்த்சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
No comments:
Post a Comment