தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் நாளை கூடுகிறது காவிரி விவகாரம் பற்றி தீர்மானம் வருகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 8, 2023

தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் நாளை கூடுகிறது காவிரி விவகாரம் பற்றி தீர்மானம் வருகிறது

சென்னை, அக்.8 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி நிலை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21ஆ-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப் பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித் தார்.  சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப் பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 9ஆ-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு கூடுகிறது.

2023-_2024-ஆம் ஆண்டு கூடுதல் செல வினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார். பேரவைக் கூட்டம் 5 நாட்கள் நடைபெற லாம் என்று சொல்லப்படும் நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.

இந்த கூட்டத்தொடரில் முக்கியமாக, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தர வின்படி தண்ணீர் திறந்துவிட கருநாடக அரசுக்கு ஒன்ரிய அரசு உத்தரவிட வேண் டும் என வலியுறுத்தி, அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற தமிழ் நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment