'பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பேராசிரியர் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவராகத் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 12, 2023

'பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பேராசிரியர் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவராகத் தேர்வு

 முனைவர் பாலகுமார் பிச்சை, எம்.ஃபார்ம்; பி.எச்.டி. 
பேராசிரியர்/இயக்குநர்
ஆய்வுப் பயிற்சி மற்றும் பதிப்புகள் - ஆய்வு மற்றும் வளர்ச்சி அலுவலகம் 
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் 
(நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 
தஞ்சாவூர் - 613403 தமிழ்நாடு - இந்தியா

பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் உலக விஞ்ஞானிகளுள் 2 சதவீதத்தினரை நன்கு தேர்வு செய்து பட்டியலிட்டு அக்டோபர் - 04, 2023 அன்று வெளியிட்டது - அமெரிக்காவில் அமைந்துள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம். அதில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் பேராசிரியர் பாலகுமார் பிச்சை அவர்கள். அவருடைய வாழ்நாள் சாதனைகள் மற்றும் அறிவியல் சார்ந்த சிறப்புப் பணிகளின் அடிப்படையில் அவர் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகத் தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது (2020, 2021, 2022, 2023).   பாலகுமார் பிச்சை மருந்தியல் மற்றும் மருந்தாக்கத் துறையைச்(Pharmacology & Pharmacy) சார்ந்தவர்.

மருந்தாக்கத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றபின் 2007இல் மருந்துகள் பற்றிய அறிவியல் ஆய்வில்  முனைவர் பட்டம் பெற்றவர் அவர். இருதயம் மற்றும் சிரைகள் சார்ந்த மருந்துகள் (Cardiovascular Pharmacology)பற்றிய ஆய்வுத் துறையில் நிபுணரானவர்  பாலகுமார்பிச்சை. மருந்தியல் சார்ந்த ஆராய்ச்சித்துறை பஞ்சாபில் உள்ள பாடியாலா பல்கலைக் கழகத்தில் உள்ளது. இந்த பஞ்சாபி பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.

சவூதி அரேபியாவில் மன்னர் காலித் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மருந்தியல் கல்லூரியில் அறிவியல் ஆய்வுப் பேராசிரியராகப் பணி புரிந்த அனுபவம் உள்ளவர் அவர்.

மலேசியா தலைநகரம் சேமிலிங்கில் உள்ள AIMST (Asian Institute of Medicine, Science and Technology)  பல்கலைக் கழகத்தின் மருந்தியல் துறையில் உயர்நிலை இணைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் அவர்.

கனடா நாட்டின் கியூபெக் நகரில் உள் மான்ட்ரீல் (Montreal)  பல்கலைக் கழகத்தில் 2009ஆம் ஆண்டு  அறிவியலாளராகவும் சேவை செய்தவர் அவர்.

பேராசிரியர் பாலகுமார் பிச்சை அவர்கள் இதுவரை 125க்கும் அதிகமான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவை சிரைகளை உள்ளடக்கிய இதயம் சார்ந்த ஆய்வு, நீரிழிவு, சிறுநீரக மருந்துகள் பற்றிய ஆய்வு உள்பட்ட பல ஆய்வுக் கட்டுரைகளாகும்.  அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக எழுத்து மூலமான வெகுமதிகள் (Citations)5730க்கும் அதிகமாக கிடைக்க பெற்றுள்ளது. அவருடைய ஆய்வுக் குறிப்புகள் அறிவியல் நிறுவனங்களில் மேற்கோள்கள் காண்பிக்க பயன்பட்டு வருகின்றன. 

பேராசிரியர் பாலகுமார் பிச்சை அவர்கள் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவத்தில் அவற்றின் பயன்பாடு குறித்த அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்குபவர். Toxicology  என்னும் நச்சியலை நன்கு கற்றறிந்தவர். இதயத்தின் இயக்கம், அதன் நோய், நலன் ஆகியவைபற்றி அறிவியல் ரீதியான ஆய்வுகள் செய்து புகழ் பெற்றவர். 2023, அக்டோபர் 8ஆம் நாள் அன்று அவரது Hindex -42 மதிப்பீடு  என்று அறியப்படுகிறது.

பன்னாட்டு இதயம் சார்ந்த ஆய்வுக் குழுவும், பன்னாட்டு இதயம் மற்றும் சிரைகள் சார்ந்த ஆய்வுக் குழுவும் இணைந்து 2007இல் பேராசிரியர் பாலகுமாருக்கு "நிரஞ்சன் எஸ். தல்லா இளம் விஞ்ஞானி" என்ற விருதை வழங்கி கவுரவித்தன.

மலேசிய பல்கலைக் கழகமான Aimst 2016ஆம் ஆண்டு "நட்சத்திர விருது 2015" ('Star Award 2015')  வழங்கி அவரைப் பெருமைப்படுத்தியது. கல்விப் பயிற்சி சார்ந்த ஒட்டு மொத்த செயற்பாடுகளையும், ஆய்வுப் பணிகளையும் பாராட்டி அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் வெளியாகும் அய்ரோப்பிய பத்திரிகை Elsevier மிகவும் பிரபலமானது. மருந்துகள் பற்றிய அறிவியல் ஆய்வுக்கு Pharmacological Research  (Impact factor : 9.3)   புகழ் பெற்ற இதழ் என்ற பெருமை அதற்கு உள்ளது. இந்த இதழின் ஆசிரியர் குழுலும்  பாலகுமார் பிச்சை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதழ் சார்ந்த பணிகளுக்கு ஆலோசனைகள் வழங்கு பவராக (Consulting Editor)  அவர் சேவை புரிந்து வருகிறார். பத்து ஆண்டு களுக்கும் மேலாக Elsevier என்னும் இந்த அறிவியல் ஆய்வு இதழின் ஆசிரியர் குழுவுடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளார் பேராசிரியர் பாலகுமார் பிச்சை.

அவரது அறிவியல் கட்டுரை உலக புகழ் பெற்ற (NATURE)  இதழில்(Impact Factor: 64.8) நமது பல்கலைக் கழக பெயரை தாங்கி (Affiliations) சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்திற்கு உள்ள ஈடு இணையற்ற பெயரும், புகழும், பெருமையும், கவுரவமும் பேராசிரியர் பாலகுமார் பிச்சை அவர்களால் மேலும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.


No comments:

Post a Comment