அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 12, 2023

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை, அக் 12  தமிழ்நாடு முழுவதும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட் டனர். கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த லஷ்மிபதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் சில அய்ஏஎஸ் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று (11.10.2023) உத்தரவிட்டார். 

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த கே.வன்னிய பெருமாள் ஊர்க்காவல் படை இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர் வாணைய உறுப்பினர் செயலராக இருந்த காவல்துறை தலைவர். பி.கே.செந்தில் குமாரி சென்னை ஒன்றிய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராக பணியமர்த்தப் பட்டுள்ளார். 

அங்கிருந்த மகேஷ்வரி திருநெல்வேலி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காத் திருப்போர் பட்டியலில் இருந்த காவல்துறை தலைமை இயக்குநர் திஷா மித்தல் தொழில்நுட்ப சேவைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருவாரூர், தென்காசி, நீலகிரி, கரூர், குமரி காவல்துறை கண்காணிப்பு அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 16 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் பி.அமுதா நேற்று உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment