குழந்தைத் திருமணம் இல் லாத தமிழ்நாடு எனும் நிலையை மாநிலத்தில் உறுதிப்படுத்துவதற் காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெ டுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக பள் ளிகளில் குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி எடுக்க சமூக நலத்துறை அறிவுறுத்தியது.
அதனை பின்பற்றும் வித மாக அதற்கான உறுதிமொழிகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான பள்ளிக ளும் நேற்று (16.10.2023) காலை வழிபாட்டுக் கூட்டத்தில் குழந் தைத் திருமணம் தடுப்பு உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல் வர்களுக்கு கல்வித்துறை உத்த ரவு பிறப்பித்தது.
அதன்படி, ‘குழந்தைத் திருமணங்கள் இல்லா’ உறுதிமொ ழியை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உறுதி மொழியின் போது, எனது பகுதியிலோ சமூகத்திலோ குழந்தைத் திருமணம் நடப்பதாக தெரியவந்தால் அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப் பேன்.
எனது சுற்றுப் புறத்தில், சமூ கத்தில் எந்தவொரு குழந்தைக் கும் திருமணம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வேன். எங்கள் பகுதியில் குழந்தைத் தொழிலாளர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொ டுமை போன்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்.
குழந்தைகளின் பாதுகாப்புக் காகவும், கல்விக்காகவும் செயல் படுவேன் என்று உறுதி அளிக்கி றேன் என கூறி மாணவர்கள் படிவங்களில் கையெழுத்திட வேண்டும் என்று குறிப்பிடப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment