சென்னை, அக்.12 கடந்த 9-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி 3 நாட்கள் பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த கூட்டத்தொடரில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கருநாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறை வேறியது.
சட்டப்பேரவையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையை சேர்ப் பதற்கான மேம்படுத்தப்பட்ட வேளாண் மண்டல திருத்த சட்ட மசோதாவை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக் கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட் டது. இந்த நிலையில், தற்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று (11.10.2023) நிறைவடைந் துள்ளது. இதையடுத்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment