உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டவர்களை விட உயர் ஜாதியினர் அதிகமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டவர்களை விட உயர் ஜாதியினர் அதிகமாம்!

புதுடில்லி, அக். 10 -  பீகாரில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வெளியானதை தொடர்ந்து, உ.பி.யிலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவரும், மேனாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் வலி யுறுத்தி வருகிறார். 

இச்சூழலில், சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை நினைவு கூர்ந்து அரசியல் விவாதங்கள் தொடங்கி உள்ளன. 

கடந்த 2001இ-ல் உ.பி.யின் இதர பிற்படுத் தப்பட்டவர்கள் (ஒபிசி) எண்ணிக்கையை அறிய ஒரு ஜாதிவாரிக் கணக் கெடுப்பு நடைபெற்றது. ஹுக்கும்சிங் தலைமையிலான குழு இதை முடித்து உ.பி. அரசிடம் ஒப்படைத்தது.

இதில், இதர பிறப் படுத்தப்பட்ட பிரிவினர் (ஒபிசி) 54.05% இருப்ப தாகக் கூறப்பட்டது. இது, கடந்த 1991இ-ல் எடுக்கப்பட்ட கணக்கெ டுப்பில் வெளியான 41 சதவீதத்தை விட அதிகம். இதற்கு அதே ஆண்டில் உ.பி.யிலிருந்து பிரிந்த உத்தராகண்ட் மாநிலம் ஒரு முக்கியக் காரண மானது.

உத்தராகண்ட் மாநில பிரிவின்போது உ.பி.யின் பெரும்பாலான உயர் சமூகத்தினர் அங்கு இடம்பெயர்ந்தனர். இதன் பிறகும் உ.பி. மற்றும் உத்தராகண்டில் உயர் சமூகத்தினர் அதி கம் உள்ளனர்.

இந்த பின்னணியில் தான் இந்த 2 மாநிலங் களில் மட்டும் பாஜக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. எனி னும், பீகாரை விட உ.பி.யில் ஒபிசி பிரிவினரின் எண் ணிக்கை அதிகம். அதே சமயம், உயர்சமூகத்தினர் எண்ணிக்கை 18 முதல் 20 % எனஹுக்கும்சிங் குழு வெளியிட்டிருந்தது.

இதில், அதிக எண் ணிக்கையில் பார்ப்ப னர்கள் 12 முதல் 14% எனப் பதிவானது. மற் றொரு முக்கிய உயர் சமூகமான தாக்குர் எண் ணிக்கை 7 முதல் 8% ஆக இருந்தது.

பார்ப்பனர்களுக்கு அடுத்த எண்ணிக்கையில் ஒபிசி பிரிவின் யாதவர் சமூகம் 2-ஆவது நிலை யில் 9 முதல் 11% என்றிருந்தது.

அப்போது ஒபிசி பிரிவில் இடம் பெற்ற 54 சமூகங்களிலும் யாதவர் கள் எண்ணிக்கை  அதிக மாக 19 முதல் 20% ஆக இருந்தது.

இதில், மேலும் 24 சமூகங்களை இணைக் கும்படி தொடர்ந்து வலி யுறுத்தப்படுகிறது.

தாழ்த்தப்பட்டவர்களில் ஜாதவ் சமூகத் தினர் மிக அதிக எண்ணிக்கையில் இடம் பெற் றிருந்தனர்.

இதனால்தான், உ.பி.யில் ஒபிசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அரசியல் அதிகம் நிலவுகிறது.இந்த கணக் கெடுப்பில் கிராமங்கள் மற்றும்  நகரங்களில் வாழும் சமூகங்கள் தொடர்பாக வும் ஹுக்கும்சிங் தனது புள்ளிவிவரங்களை வெளியிட்டிருந்தது. 

இதன்படி, கிராமங் களை விடநகரங்களில் உயர் சமூகத்தினர் அதி கம் வாழ்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

உ.பி.யில் உள்ள கிரா மங்களில் உயர்சமூகத்தினர் 22.42%, ஒபிசியினர் 37.50%, தாழ்த்தப் பட்டவர்கள் 25%, முஸ்லிம்கள் 13.36% வசிப்பதாக தகவல் வெளியானது.

 இதே சமூகங்களின் எண்ணிக்கை நகரங் களில் உயர் சமூகம் 32%, ஒபிசியினர் 21.96%, தாழ்த்தப்பட்டவர்கள் 15.27% வசிப்பதாக அறிக்கை வெளி யானது.

22 ஆண்டுகளுக்கு முன்பான இந்த எண் ணிக்கை தற்போது கண்டிப் பாக உயர்ந்திருக்கும் என் பது அரசியல் கட்சிகளின் கணிப்பாக உள்ளது. 

இந்த  சூழல், ஜாதி களின் அடிப்படையில் அரசியல் செய்யும் உ.பி. கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது.

எனவே, பா.ஜ.க. ஆளும் உ.பி. அரசை தொடர்ந்து ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த உ.பி.யைச் சேர்ந்த அரசி யல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment