2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனியும் கையில் இருந்தால் என்னவாகும்.. மாற்ற முடியுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனியும் கையில் இருந்தால் என்னவாகும்.. மாற்ற முடியுமா?

புதுடில்லி, அக்.11 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற் றுவதற்கான கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், இனியும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்து இருந்தால் அதை மாற்ற முடியுமா? என்பது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய விவரம் கொடுத்துள்ளது.  

 ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் 2000 ரூபாய் நோட்டுகள் செப் டம்பர் 30 ஆம் தேதிக்குகுள் வங்கிகளில் கொடுத்து மாற் றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. வங்கி களில் எந்த ஆவணங் களும் இன்றி பணத்தை மாற்றிக் கொள்ள அவகாசம் கொடுக் கப்பட்டது.

இதைப்பயன்படுத்தி மக்கள் தங்கள் வசம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக் களை மாற்றி வந்தனர். செப் டம்பர் 30 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டு இருந்த அவகாசம், மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட் டது. அதாவது, அக் டோபர் 7 ஆம் தேதி வரை வங்கி களில் பணத்தை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி அவ காசம் வழங்கியது. இந்த அவகாசம் 7.10.2023 அன்று முடிந்தது.

இந்த நிலையில் தான், இனியும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்து இருந்தால் அது என்ன வாகும், செல்லாத ரூபாய் நோட்டுக் களாகிவிடுமா? பணத்தை மாற்ற முடியுமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

 இந்த நிலையில், இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப் பட்டதாவது:- பொது மக்களோ நிறுவனங்களோ தங்கள் வசம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட் டுக்களை ரிசர்வ் வங்கியின் 19 அலு வல கங்களின் மூலமாக தொடர்ந்து மாற்றிக்கொள்ள முடியும்.

அகதாபாத், பெங்களூர், பெலாப்பூர், போபால், புவ னேஷ்வர், சண்டிகர், சென்னை, கவு காத்தி, அய்தரபாத், ஜெய்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டில்லி, பாட்னா மற்றும் திருவனந் தபுரம் ஆகிய இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவல கத்தில் மாற்றிக் கொள்ள முடியும். அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்ற லாம்.

தற்போதுவரை திரும்பப் பெறப்பட்ட ரூ.3.43 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டு களில் 87 சதவீதம் வங்கிக் கணக் குகளில் வைப்பு வைக்கப்பட்டது. மற்றவை வங்கிகளில் பணமாக மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. ரூ.12,000 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்பட வில்லை. ரிசர்வ் வங்கிக்கு செல்ல இய லாதவர்கள், அஞ்சல் துறையின் சேவையைப் பயன்படுத்தி மாற்றிக் கொள்ள  முடியும். . 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமாக இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment