அமைந்தகரை, செப். 30- தந்தை பெரியார் 145ஆம் பிறந்த நாள் விழா, 17.9.2023 அன்று பகல் 12.30 மணிக்கு, வடசென்னை மாவட்டம், அமைந்த கரை பகுதிக் கழகம் சார்பில், அமைந்தகரை - செனாய் நகர், புல்லா அவின்யூ மார்க்கெட் அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை வகித்தார்.
சென்னை மாநக ராட்சி மன்ற தி.மு.க. உறுப்பினர் மெடில்டா கோவிந்தராஜ் திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்து, விழாவினைத் தொடங்கி வைத்தார். அண்ணா நகர் வடக்குப் பகுதி தி.மு.க. செயலாளர் ச.பரமசிவம் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
நிகழ்வின் தனிச் சிறப் பாக பிரியாணி உணவு டேனியல் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு (300 பேருக்கு) வழங்கப்பட்டது.
வட்ட தி.முக. செயலா ளர் திருமலை, பகுதி தி.மு.க. துணை செயலா ளர் சுரேந்தர், வழக்கு ரைஞர் திவாகர், தொழிலதிபர் சித்தார்த் தன், வழக்குரைஞர் உதய பிரகாஷ், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் இராஜன், மணிகண்டன் ஆகியோர் பங்கேற்று தந்தை பெரியாரது அரிய தொண்டினை விளக்கிக் கூறினர்.
வடசென்னை மாவட்ட கழக செயலா ளர் புரசை சு.அன்புச் செல்வன், அமைப்பாளர் சி.பாசுகர், இளைஞரணி செயலாளர் அரவிந்த், மாதவரம் கழக அமைப் பாளர் சி.வாசு, அண்ணா நகர் - அமைந்தகரை கழ கப் பொறுப்பாளர்கள் அருள்தாஸ், துர்க பிர காஷ் ஆகியோர் நிகழ்ச் சியை ஒழுங்குபடுத்தி உரிய பணிகளைச் செய் தனர்.
தந்தை பெரியார் பட சுவரொட்டிகள் எங்கும் ஒட்டப்பட்டு, வாசகங் களுடன் கூடிய பெரியார் பட பேனர்கள் வைக்கப் பட்டு, சிறப்பாக கழகக் கொடிகளும் கட்டப்பட் டிருந்தன.
ஏராளமான பொது மக்களும், வியாபாரிகளும் விழாவில் கலந்து கொண் டனர்.
நிறைவாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவின் ஒருங்கிணைப் பாளர், அண்ணா நகர் பகுதி கழக செயலாளர் சாம் குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment