புதுடில்லி, செப்.29 - ஸநாதன தர்மம் குறித்த சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைபொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு: சென்னையில் நடந்த ஸநாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து சர்ச்சை ஏற் பட்டது. இது தொடர்பாக வழக்குரைஞர் வினீத் ஜிந்தால் சார்பில் வழக்குரைஞர் ராஜ் கிஷோர் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஷாகீன் அப்துல்லா வழக்கில், மத வெறுப்பு பேச்சுகள் தொடர்பான புகார்களுக்கு காத்திராமல், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸநாதன தர்மம் குறித்த சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் உதயநிதிஸ்டாலின், ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக டில்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே, மனுதாரரின் புகார்களை பதிவு செய்துகொண்டு வழக்குப் பதிவு செய்ய டில்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த மறுத்த டில்லி மாநகர காவல்துறை ஆணையர், வடமேற்கு டில்லி காவல்துறை துணை ஆணையர், நேதாஜி சுபாஷ்சந்திர பிளேஸ் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தாக்கீது அனுப்பவேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் அனிருத்தாபோஸ், பேலாஎம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விளம்பர நோக்கத்தில்... விசாரணையின்போது தமிழ் நாடு அரசின் சார்பில் அடிசனல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, விளம்பர நோக்கத்துடன் இதுபோன்ற பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் 40 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள் ளன. இது மாநில அரசுக்கு சவாலாக மாறியுள்ளது என வாதிட்டார்.
அதற்கு, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜ் கிஷோர் சவுத்ரி ஆட்சேபனை தெரிவித் ததுடன், இன அழிப்புக்கு ஆதர வாக மாநில அரசு உள்ளதாக வாதிட்டார்.
உத்தரவிட மறுப்பு: இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி கள், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட முடி யாது. ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் இணைத்து விசாரிக்கிறோம் என தெரிவித்தனர். ஸநாதன ஒழிப்பு மாநாட் டுக்கு எதிரான சென்னை வழக்குரைஞர் பி.ஜெகநாத்தின் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு உள்ளிட்டவற்றுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 14ஆம்தேதி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment