5 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட 15 ஓதுவார்களுக்குப் பணி நியமனம்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்!
சென்னை, செப்.25 அய்ந்து பெண் ஓது வார்கள் உள்ளிட்ட 15 ஓது வார்களுக்கு இன்று (25.9.2023) பணி நியமனங்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்!
கோவில்களில் பூஜை செய்யும் அர்ச் சகர் பணியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட் டுமே சேர முடியும் என் பதை மாற்றி அமைத்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத் தைத் தமிழ் நாடு அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. அதற்காக ஓராண்டு அர்ச்சகர் படிப்பை அரசு அளித்து வருகிறது. அதன்படி, திரு வண்ணாமலை, பழனி, திருச்செந் தூர், சிறீரங்கம், சென்னை ஆகிய ஊர்களில் தலா ஒரு பயிற்சி பள்ளி வீதம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 2022-2023 ஆம் ஆண்டுக் கான ஓராண்டு பயிற்சியை 94 பேர் முடித்துள்ளனர். அதில் சிறீரங்கத்தில் பயிற்சி முடித்த ரஞ்சிதா, கிருஷ்ண வேணி, ரம்யா எனும் 3 பெண்களும் அடங்குவர்.
இவர்களுக்கு அண்மையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஓராண்டு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். இங்கு ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்ற வர்களுக்கு அடுத்ததாக ஏதேனும் ஒரு கோவிலில் குறிப்பிட்ட கால அளவுக்குப் பயிற்சி அளிக்கப்படும்; அதன் பிறகு கோவில்களில் எப் போது காலிப் பணியிடங்கள் வரு கிறதோ அப்போது இவர்களுக்கு விதிகளின்படி பணி வழங்கப்படும்.
இந்த நிலையில் இந்து சமய அற நிலையத்துறையின் ஆளுகைக்கு உட்பட்ட கோயில்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப் பட்டுள்ள 5 பெண் ஓதுவார்கள் உள்பட மொத்தம் 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கி யுள்ளார். காலியாகவுள்ள மேலும் 73 ஓதுவார் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற 160-க்கும் மேற்பட்டவர்கள் உதவி அர்ச்சகர் களாக நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment