தந்தை பெரியாரின் கைத்தடியால் அடித்து நொறுக்கி வெற்றி இலக்கை அடைவோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 11, 2023

தந்தை பெரியாரின் கைத்தடியால் அடித்து நொறுக்கி வெற்றி இலக்கை அடைவோம்

சமூகநீதியின் சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதல் அமைச்சராகப் பதவியேற்ற (மே-7,2021) இரண்டரை ஆண்டுகளில் எண்ணற்ற சரித்திரச் சாதனைகளைச் செய்து இந்தியாவின் நம்பர் -1 முதலமைச்சராகத் திகழ்வது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றாகும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சாதனைகளில் முத்தாய்ப்பாக; பேருந்தில் பெண் களுக்கு கட்டணமில்லாப் பயணம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் வாயிலாக ரூ.1000, விலைமதிப்பற்ற மனித உயிர் காக்கும் உயரிய நோக்கில் இல்லம் தேடி மருத்துவத் திட்டம், குடும்பத் தலைவிக்கு கலைஞர் உரிமைத் தொகை ரூ.1000 உள்ளிட்ட ஏராளமான சாதனைகளைச் செய்திருந்தாலும் என்னை மட்டுமன்றி அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாகக் கவர்ந்தது அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற பசிப்பிணி போக்கும் ' காலை உணவுத் திட்டம் '  என்கின்ற மகத்தான திட்டமாகும்.

ஆம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும்  காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்  படித்த பள்ளியான நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (25.08.2023) தொடங்கிவைத்து மாணவ-மானவியருடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய காட்சி பார்த்தவர்களை பரவசப்படுத்தியதோடு மட்டுமன்றி பள்ளிக் குழந்தைகளையும் இன்பத்தில் ஆழ்த்தியது.

1920-ஆம் ஆண்டு வெள்ளுடை வேந்தர் தியாகராயர் அவர்கள் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது அவரது சீரிய முயற்சியால் சென்னையில் முதன்முதலாக ஆயிரம் விளக்குப் பகுதி மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் கல்வி வள்ளல் காமராஜர் ஆட்சிக் காலத்தில்,  மதிய உணவுத் திட்டம்  படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டது. பிறகு எம்.ஜி.ஆர்  ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் என்பது சத்துணவுத் திட்டமாக உருப்பெற்றது. அதன் பின்பு கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மதிய உணவில் முட்டை, காய்கறிகள் மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளைச் சேர்த்து சத்துணவுத் திட்டத்தை செம்மைப்படுத்தினார்.

அந்தவகையில் அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வந்த சூழலில்; மாணவர்களின் ஆரோக்கியம் மேலும் மேம்படவும், கல்வித்தரத்தை உயர்த்தவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும் ஏதுவாக மாண வர்களுக்கு காலை உணவு வழங்கப்பட வேண்டியது அவசியம் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித் ததின் பயனாய் கொண்டுவரப்பட்டதுதான்  'காலை உணவுத் திட்டம்'  என்கின்ற முத்தாய்ப்பான திட்ட மாகும்.

"சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே" என்று கூறுகின்ற மனுதர்மம் எனும் அதர்மத்தை தூக்கிப் பிடிக்கின்ற - தாங்கிப் பிடிக் கின்ற பார்ப்பனர்களின் ஆதிக்க  மனப்பான்மையை நமது இன மீட்பாளர்களான தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராஜர், அறிஞர் அண்ணா, முத்தமி ழறிஞர் கலைஞர் ஆகியோர் வெட்டி வீழ்த்தியதின் பயனாய் சூத்திர மக்கள் கல்வி கற்று வேலைவாய்ப்பை தற்போதுதான் எட்டிப் பிடித்துள்ளனர். ஆனால், அதனை பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பன நாளேடான 'தினமலர்' என்று அழைக்கப்படுகின்ற தினமனு (சேலம் பதிப்பு) அருவெறுக்கத் தக்க, இழிவான சொற்களால் சூத்திர மக்களை கிராமப்புற ஏழை - எளிய மாணவர்களை கொச்சைப் படுத்தி வேதனைக்கு உள்ளாக்கி இருப்பது ஆண வத்தின் உச்சம்!

மாற்றாரும் போற்றிப் புகழ்கின்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காலை உணவுத் திட்டத்தை, கொஞ்சம்கூட மனிதத் தன்மை இன்றி கேவலப்படுத்துகின்ற இன எதிரிகள் தங்களது நயவஞ்சகத்தை, வக்கிரபுத் தியை, பார்ப்பன நஞ்சை வெளிப்படுத்தும் விதமாக தங்களால் நடத்தப்படுகின்ற தினமனு நாளேட்டில் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக கொட்டை எழுத்தில் " காலை உணவுத் திட்டம்: மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது"  என்று மலம் நிரப்பிய தினமனுவின் பேனா முள்ளால் தனக்குள் தேங்கிக்கிடக்கும் இழி வான எண்ணத்தை வெளிப்படுத்தி எக்காளமிடுகிறது என்றால் தமிழர்கள் ஏமாளிகள் என்ற  நினைப்பு தானே!

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழர்களிடம் தினமனுவை விற்று அவர்களிடம் பெற்ற பணத்தால் வயிறு வளர்த்துக்கொண்டு, சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தமிழர்களை கொச்சைப்படுத்து கின்ற - இழிவு படுத்துகின்ற தினமனு என்கிற நாற்றமெடுத்த நாளேட்டை தமிழர்கள் இனிமேலும் வாங்கலாமா? அந்நாளேட்டை கையால் தொடுவது கூட இனத்திற்கு செய்யும் துரோகம் அல்லவா?

எனவே, இனியேனும் தமிழ்நாட்டு மக்கள்  நம்முடைய இன நலனுக்காக - உரிமைக்காக குரல் கொடுக்கின்ற நாளேடுகள் எவை? நமக்காக நமது இன மீட்புக்காக தன்னலமற்று உழைக்கும் தலை வர்கள் யார்? என்பதை புரிந்துகொண்டு இன எதிரி களை மட்டுமன்றி அவர்களால் நடத்தப்படுகின்ற நாளேடுகளையும் - வார இதழ்களையும் முற்றிலு மாகப் புறக்கணிக்க முன்வரவேண்டியது அவசிய மாகும்.

அண்மையில் (31.08.2023) தெலங்கானா மாநில  அரசு அதிகாரிகள், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வருகைதந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தை பார்வையிட்டு, உணவு தயாரிக் கும் முறையை ஆவலோடு கேட்டறிந்து, மாணவர் களுக்கு கனிவோடு உணவு பரிமாறப்படுகின்ற பாங்கை நேரில் பார்த்து வியந்து பாராட்டி விட்டுச் சென்ற இனிய செய்தியை  தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும் அறிந்த இன உணர்வாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், பெற்றோர்கள் - மாணவர்கள் கையொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியை, நன்றியை வெளிப்படுத்துகின்றனர்.

இவ்வாறு பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை நாளும் செய்து வருகின்ற திராவிட மாடல் ஆட்சி, தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தியதின் பயனாய் மாணவச் செல்வங்கள் பள்ளிக்கு ஆர்வமுடன் வருவதோடு, மாணவர்களின் வருகை அதிகரித்து இருப்பதாகவும், அவர்களின் ஆரோக்கியம் - கற்றல் திறன் ஆகியவை மேம்பட்டி ருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இன எதிரிகளின் சூட்சமத்தை, நயவஞ்சகச் செயலை, விபரீதப் போக்கை தந்தை பெரியார் அவர்களின் கைத்தடியால் அடித்து நொறுக்கி வெற்றி இலக்கை அடையவேண்டியது  இன்றியமையாததாகும். 

மேலும், பசிப்பிணியைத் துரத்தவேண்டும் என்பதே உலக நாடுகளின் லட்சியம். அதை நோக்கி உலகம் வேகமாக நகர்ந்துகொண்டு இருக்கிறது. ஆகவே, அத்தகைய லட்சிய நோக்கில் வீறுநடை போடும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களால் செம்மைபடுத்தப்பட்ட   'காலை உணவுத் திட்டம் ' என்பது இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழும் முன்னோடித் திட்டமாகும். தொலைநோக்குப்  பார்வையோடு திராவிட மாடல் ஆட்சியால் கொண்டுவரப்பட்ட இத்தகைய உன்னதமான காலை உணவுத் திட்டத்தை மற்ற மற்ற மாநில அரசுகளும் பின்பற்ற முன்வந்திருப்பது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்திட்ட மிகப்பெரிய வெற்றியாகும்.

வெல்லட்டும் திராவிடம்!

வீழட்டும் ஆரியம்!

- சீ. இலட்சுமிபதி,

தாம்பரம்

No comments:

Post a Comment