மாவட்ட கழக செயலாளர் சா. பூபதிராஜா, ஒன்றிய கழக செயலாளர் நல். இராஜா, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் இராஜ வேங்கன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர். அன்வர், ஆத வன், புகழ் ஆகியோர் முன்னிலையற்றனர்.
ஊர்வலம்
படத்திறப்பு
அதைத்தொடர்ந்து தந்தை பெரியார் படத்தை மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி திறந்து வைத்தும், அறிஞர் அண்ணாவின் படத்தை மாநில மகளிர் அணி செயலா ளர் தகடூர் தமிழ்ச்செல்வி திறந்து வைத்தும், அண்ணல் அம்பேத்கர் படத்தை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன் திறந்து வைத்தும் அன்னை மணி யம்மையார் படத்தை மகளிர் பாசறை தோழர் ஆசிரியர் த.மு. சுடரொளி திறந்து வைத்தும் கருத்துரையாற்றினர்.
பங்கேற்ற அனைவருக்கும் மாநாட்டு குழு சார்பில் கழகப் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தனர்.
சிறப்புரை
மாநாட்டின் இறுதியாக திராவிடர் கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி தனது சிறப்புரையில்,
தந்தை பெரியார், காமராசர், கலைஞர், பாரதிதாசன், அன்னை மணி யம்மையார், ஆசிரியர் கி.வீரமணி, நடிக வேள் எம். ஆர். இராதா, ஆகியோர் வருகை தந்த கிராமம். மறைந்த வி.ஆர். வேங்கன் இல்லத்தில் தங்கி உணவு அருந்தி இயக்கம் நடத்திய தலைவர்கள் வந்து சென்ற ஊர் என்பதனை நினைவு படுத்திப் பேசியதுடன் ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கு, நீட் தேர்வின் அவலம், விஸ்வகர்மா யோஜனா திட் டம் என்பது ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தின் மறுவடிவம் என்பதை சுட்டிக்காட்டி பேசியதுடன் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் இளைஞர்களின் முயற்சியால் வெங்கட சமுத்திரம் கிராமத்தில் ஒன்றிய மாநாடு நடைபெறுவது பாராட்டுக்குரியது என தனது சிறப்புரையில் குறிப்பிட்டு பேசினார்.
வறுமையிலும் குடும்ப சூழ்நிலைத் தாண்டி மருத்துவக் கனவுகளோடு படித்த மாணவர்களின் கனவை நீட் தேர்வு மூலம் பல உயிர்களை பலி வாங் கிய ஒன்றிய அரசினை, கண்டிப்பதுடன், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும்,
ஒன்றிய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையினை கண்டிப்பது டன் அதை கைவிடுமாறு வலியுறுத்து கிறது எனவும்,
புதிய கைத்தொழில் என்ற பெயரில் கொண்டுவரும் புதிய வடிவிலான குலக் கல்வி திட்டத்தை மாநாடு கண்டிப்ப துடன் கைவிடுமாறு கேட்டுக்கொள் கிறது எனவும்,
பள்ளி கல்லூரிகளில், ஜாதி மத பேதங்களை மறந்து சமத்துவமாக வாழ வேண்டிய இடத்தில் ஜாதி மனப்பான் மையுடன் கையில் கயிறு கட்டுதல், உடை உடுத்துதல், பேத நிலையை உரு வாக்குதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மாணவர்கள், ஆசிரியர்களை கண்டறிந்து நடவ டிக்கை எடுப்பதுடன், அவற்றை தடுக் கும் வண்ணம் தமிழ்நாடு அரசு திட் டத்தை வகுக்க வேண்டும் திராவிடர் மாணவர் கழகம் கேட்டுக்கொள்கிறது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
பங்கேற்றோர்
மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத்குமார், அய்யனார் ஆசிரியர் கள் அன்பரசு மா. பூங்குன்றன், கிளைக் கழக தலைவர் சி.அழகிரி, கடத்தூர் ஒன் றிய தலைவர் பெ.சிவலிங்கம், திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள் ப.பெரியார், பிரதாப், சூர்யா, மோகன் குமார், சண்முகம், தமிழரசன், நாச்சி யப்பன், சத்தியபிரியன், பதி, சிவா, வரன், தமிழ்வாணன், சீனிவாசன், முகிலன், சக்திவேல், தருண், இளைய புகழ், கலைச்செல்வன், வேலு, மற்றும் இளை ஞரணி, மாணவணி தோழர்கள் பெரு மளவில் கலந்து கொண்டனர்.
வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பாராட்டு வரவேற்பு
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் பல நடந்திருந்தாலும், நீண்ட நாட்களுக் குப் பிறகு வெங்கடசமுத்திரத்தில் திரா விடர் கழக இளைஞர்களின், மாணவர் களின் முயற்சியால் மாநாடு நடத்துவது சிறப்புக்குரியது. இங்கு வந்து தங்கி சென்ற தந்தை பெரியார், கலைஞர், ஆசிரியர் வீரமணி, உள்ளிட்டவர்களு டன் பேசியிருக்கிறோம், அவர்களுடன் உணவருந்தி இருக்கிறோம், என்று பல நினைவுகளை நினைவு கூர்ந்து பேசி, பாராட்டியது வியப்பை ஏற்படுத்தியது.
இறுதியாக மாணவர் கழகத் தோழர் சே. வசந்தி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment