ஹிந்து மத கடவுள் சிவ லிங்கம்மீது பாஜக அமைச்சர் கை கழுவிய காட்சிப் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

ஹிந்து மத கடவுள் சிவ லிங்கம்மீது பாஜக அமைச்சர் கை கழுவிய காட்சிப் பதிவு

சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது

லக்னோ, செப்.5 உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் சதீஷ் சர்மா. இவர் ராம்பூரியில் உள்ள ஹிந்து மத வழிபாட்டு தலமான சிவன் கோவில் சென்றார். அங்கு உள்ள சிவ லிங்கத்தை அவர் வழிபட்டார். அப்போது, சிவ லிங்கம் மீது பாஜக அமைச்சர் கை கழுவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் சர்மா சிவ லிங்கத்திற்கு பூஜை செய்துள்ளார். பின்னர், கையில் சந்தனம் இருந்ததால் கையை சுத்தப்படுத்த சிவ லிங்கம் மீது கையைக் கழுவியுள்ளார். இது தொடர்பான காட்சிப் பதிவு சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், ஸனாதன தர்மத்தை மதிக்காதவர்கள் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார்கள். மதத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்ட சதீஷ் சர்மாவை அமைச்சர்  பதவியில் இருந்து முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் நீக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, ஸனாதன தர்மம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து வட இந்தியாவில் பேசுபொருளான நிலையில் தற்போது பாஜக அமைச்சர் சதீஷ்சர்மா கடவுள் சிவலிங்கம் மீது கை கழுவும் காட்சிப் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment