சென்னை, செப். 30- நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி தொடர்பாக விவாதிக்க திமுக மாவட்ட செய லாளர், தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் காணொலி
வாயிலாக நாளை (1.10.2023) நடை பெறுகிறது.
இதுகுறித்து திமுக பொதுச்செய லாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப் பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் அக். 1ஆ-ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும். இதில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வை யாளர்கள், அமைச்சர்கள் அனை வரும் தவறாமல் பங்கேற்க வேண் டும்’’ என தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில், மாவட்ட வாரி யாக பூத் ஏஜென்ட்கள் நியமனம் தொடர்பாக சமீபத்தில் முதலமைச் சர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
இதுதவிர,தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமித்து, அந் தந்ததொகுதிகளில் பூத் ஏஜெண் டுகள் நியமனத்தை கண்காணிப் பதுடன், தொகுதி நிலவரத்தை அறிந்து வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளை நடை பெறும் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகள் செல்வாக்கு, திமுகவின் தனித்த செல்வாக்கு, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கொடுப்பது, வெற்றி வாய்ப்பு உள் ளிட்டவை குறித்து ஆலோசிக் கப்பட வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது.
No comments:
Post a Comment