பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் டேக்வாண்டோ போட்டியில் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் டேக்வாண்டோ போட்டியில் சாதனை



திருச்சி, செப். 2
- திருச்சி மாவட்ட டேக் வாண்டோ வாகையர் பட்டப் போட்டிகள், திருச்சி கருமண்ட பத்தில் உள்ள தேசிய கல்லூரி வளாகத்தில் 26, 27.8.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடந்தன. 

இதில் திருச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

மாவட்ட அளவில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் டேக்வாண்டோ அணியின்  52 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  இந்தப் போட்டி களின் முடிவில், 20 தங்கப் பதக்கங் களும், 15 வெள்ளிப் பதக்கங்களும், 17 வெண்கலப் பதக்கங்களும் பெற்று 52 மாணவ, மாணவிகளும் சாதனை படைத்தனர். மேலும் மாவட்ட அளவில், மழலையர் பிரி வில் இரண்டாம் இடமும், இளை யோர் பிரிவில் முதல் இடமும், மூத்தோர் பிரிவில் முதல் இடமும் பெற்று, ஒட்டுமொத்த வாகையர் பட்டத்தையும், சுழற்கோப்பையை யும் வென்றனர். 

கடந்த 8 ஆண்டுகளாக வேறொரு பள்ளி தக்க வைத்துக் கொண்டிருந்த சுழற்கோப்பையை தங்கள் சாதனை யால் முறியடித்து,  இந்த ஆண்டு, திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத் தக்கது. வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை தேடித் தந்த மாணவர் களையும், பள்ளியின் டேக் வாண்டோ பயிற்சியாளர்த.பால சுப்ரமணியன், பள்ளி முதல்வர்.டாக்டர்.க.வனிதா மற்றும் ஆசிரி யர்களும், அலுவலகப் பணித் தோழர் களும் பாராட்டி மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment