கூடலூர், செப். 4- நீலமலை மாவட்டம், கூடலுர், கள்ளிக்கோட்டை சாலை, ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் 03.09.2023 ஞாயிற்றுக்கிழமை 55 மாண வர்களுடன் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது. மாவட்ட செய லாளர் மு.நாகேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திமுக மாவட்ட பிரதிநிதி ஆசாத் வாழ்த்துரை வழங்கினார்
திமுக சொற்பொழிவாளர் மு.பாண்டியராஜன் தலைமையேற்று உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் சி. இராவணன், மாவட்ட ப.க. செயலாளர் இரா.வாசுதேவன் ஆகியோர் முன்னி லையேற்றனர்.
தந்தை பெரியார் மருத்துவக் குழும மாநில தலைவர் டாக்டர் இரா.கவுதமன் பயிற்சிப் பட்டறையினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தலைப்பு - வகுப்பு - வாழ்த்து
பேராசிரியர் ப.காளிமுத்து - தந்தை பெரியார் ஓர் அறிமுகம் என்ற தலைப்பிலும், உளவியல் நிபுணர் ஜெ.வெண்ணிலா - பெண்ணுரிமையின் பேரிலக்கணம் என்ற தலைப்பிலும், மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் - பார்ப்பன பண்பாட்டு படையெடுப்புகள் என்ற தலைப்பிலும், தந்தை பெரியார் மருத் துவக் குழும மாநில தலைவர் டாக்டர் இரா.கவுதமன் - பேய் ஆடுதல், சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம் என்ற தலைப்பிலும், திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார் - தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும் மற்றும் தமிழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் சாத னைகள் என்ற தலைப்பிலும், மாநில தகவல் தொழில்நுட்பணி அமைப்பாளர், எழுத்தாளர் வி.சி.வில் வம் - ஊடகத்துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம் என்ற தலைப்பிலும் வகுப்பெடுத்தனர்.திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயிற் சிப் பட்டறையை ஒருங்கிணைத்து, இப்பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களையும், ஏற்பாடு செய்த தோழர்களையும் பாராட்டி உரையாற்றினார்.
பயிற்சி மாணவர் கருத்து
த.ஸ்டாலின் என்கிற மாணவன் பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு போன்ற கருத்துகளை அதிகம் பேசிய தலைவர் தந்தை பெரியார் தான். அவருடைய கருத்துகளை புத்தகங்களை மாண வர்கள் இளைஞர்கள் அதிகமாக படிக்க வேண்டும் அவரது கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று சிறப்பான முறையில் தனது கருத்துகளை தெரிவித்தார்.
பரிசு மற்றும் சான்றிதழ்கள்
இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு சிறப்பாக குறிப்பு எடுத்த சூசைராஜ், ரேஷ்மாராணி, வர்ஷா, கவியரசி, சுந்தரேஷ்வரன் ஆகிய 5 மாணவர்களுக்கு புத்தகங்கள் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டன. இந்த பெரியாரி யல் பயிற்சி பட்டறையில் ஆண்கள் 45 பெண்கள் 10, கல்லூரி படிக்கக்கூடிய மாணவர்கள் 51 பள்ளி படிக்கக்கூடிய மாணவர்கள் 4 என மொத்தம் 55 மாண வர்கள் பயிற்சி பெற்றனர் என்பது சிறப் புக்குரியது. கலந்துகொண்ட அனைத்து மாணவர்களையும் ஊக்கப்படுத்தி திரு நாவுக்கரசு இயக்க புத்தகங்களை பரிசாக வழங்கினார். அனைத்து மாணவர்களுக் கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட 15 இளைஞர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்து உறுப்பினர் படிவம் பெற்று சென்றது சிறப்பிற்குரியது.
இயக்க பிரச்சாரத்திற்கு அன்பளிப்பு
திமுக சொற்பொழிவாளர் மு.பாண் டியராஜன் பயிற்சிப் பட்டறை நடை பெறுவதற்கு அரங்கம் மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் உணவு ஏற் பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். மேலும் இயக்க பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை வலி யுறுத்தி நீலமலை மாவட்ட திராவிடர் கழகத்திற்கு ஒலிபெருக்கி ஒன்றிணை அன்பளிப்பாக வழங்கினார்.
இறுதியாக பயிற்சிப் பட்டறையினை ஏற்பாடு செய்த தோழர்கள் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களு டன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் சா.ஜீவா நன்றியுரையாற்றினார்.
திமுக தோழர்கள் பாண்டியராஜ், ரசாக், ராமன், சிவசெல்வன், நிர்மல், நவநீதன், சூசைராஜ், செல்லத்துரை, சுஜீத்குமார், மதிவாணன், நவீன்ராஜ், சக்திவேல் ஆகியோர் பங்கேற்றதுடன், இப்பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடை பெற உறுதுணையாகவும் இருந்தனர்.
நிகழ்வில் மதுரை டாக்டர் திருநாவுக் கரசன்- மனோரஞ்சிதம் -சி. மகேந்திரன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் திமுக தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
- தொகுப்பு: முனைவர் வே.ராஜவேல்
No comments:
Post a Comment