ஆனந்த், செப். 25- குஜராத் மாநிலத்தில் ஆற்றை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்தது. 40 ஆண்டு பழைமையான பாலம் சமீபத்தில் பழுது பார்க்கும் பணி நிறைவுற் றது என்பது குறிப்பிடத் தக்கது
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப் பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் இந்த பாலத் தில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது.
பாலம் இரு துண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததால், அதன் மீது சென்றுகொண்டு இருந்த குப்பை லாரி, இருசக்கர வாகனங்களும் ஆற்றில் விழுந்தன. உடனடியாக அப்பகுதி மக்கள் படகு மூலம் நீருக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். காவல் துறையினர் மற்றும் மீட்புப் படையினருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் விழுந்த சுமார் 10 பேர் துரிதமாக மீட்கப்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
நீண்ட ஆண்டுகளாக சிதலமடைந்த பாலத்தை பழுதுபார்க்கும் பணிக் காக உள்ளூர் மக்கள் முறையிடவே சில ஆண் டுகளுக்கு முன்பு பழுது பார்த்து புதுப்பிக்கப் பட்ட பாலம் இரண்டாக பிளந்தது இதுதான் குஜ ராத் மாடல்.
No comments:
Post a Comment