சிங்கப்பூர் நாட்டின் அதிபராக அந்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள மேதகு பெருமைக் குரிய தர்மன் சண்முக ரத்தினம் அவர் களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘‘அரசியல், பொருளாதார, சமூக, கல்வித் துறைகளில் கற்றும், ஆளுமை செய்தும் தாங்கள் பதித்துள்ள நிபுணத்துவ முத்திரை, மேலும் இந்தப் புதிய பொறுப்பிலும் தகத்தகாய ஒளியுடன், அந்நாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்திற்கு சிறந்த கலங்கரை வெளிச்ச மாக உதவும் என்பது உறுதி'' என்பதே தமிழ்கூறும் நல்லுலகின் நம்பிக்கையாகும்!
- கி.வீரமணி,
திராவிடர் கழகம், (சமூக அமைப்பு),
தமிழ்நாடு, இந்தியா
No comments:
Post a Comment