காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, செப். 13- இடஒதுக் கீட்டின் பலன்கள் மக்களுக்கு துல்லியமாக சென்றடைய தமிழ் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர் தலை எதிர்கொள்வது தொடர் பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவ னில் 11.9.2023 அன்று நடை பெற்றது.
கூட்டத்தின் முடிவில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மக்களவை தேர்தலுக்கு தயாரா வது தொடர்பாக சோழ மண்டல காங்கிரஸ் வாக்குச்சாவடி உறுப்பி னர்கள், நகர, மாநகர, ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை கும்பகோணத்தில் அண்மையில் நடத்தி இருந்தோம்.
அடுத்ததாக திண்டுக்கல், தேனி ஆகிய மக்களவைத் தொகுதி நிர் வாகிகள் கூட்டம் 21ஆ-ம் தேதியும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம் பரம் தொகுதி நிர்வாகிகள் கூட் டம் 24ஆ-ம் தேதியும், திருவள்ளூர் தொகுதிக்கு 30ஆ-ம் தேதியும், விருதுநகர், தென்காசி தொகுதி களுக்கு அக்.8-ஆம் தேதியும், கன்னி யாகுமரி தொகுதிக்கு அக்14ஆ-ம் தேதியும், தூத்துக்குடி, திருநெல் வேலி தொகுதிகளுக்கு அக்.22ஆ-ம் தேதியும் நடைபெற உள்ளன.
மற்ற தொகுதிகளுக்கான தேதிகள் பின் னர் அறிவிக்கப்படும்.
எப்போதோ எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இட ஒதுக்கீடு செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதன் பலன்கள் துல்லியமாக மக்களுக்கு சென்ற டைவதில்லை.
இட ஒதுக்கீட்டின் பலன்கள் பாரபட்சமின்றி, சமமாக, துல்லி யமாக மக்களை சென்றடைய தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். பிர தமர் மோடி, இந்தியாவின் பெயரை மாற்றி இருக்கலாம்.
ஆனால் ஜி_20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அனை வரும் "இந்தியா" என்று தான் கூறினர். ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்த பிரதமர் மோடி முயற்சிக்கலாம். நாட்டில் சட்டம், நீதிமன்றங்கள் உள்ளன. அதில் அவரது முயற்சி தோற்கடிக்கப் படும். இவ் வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆருண், பீட் டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ண மூர்த்தி, உ.பலராமன், நாடாளு மன்ற உறுப்பினர்கள் செல்லக் குமார், ஜெயக்குமார், மாணிக்கம் தாகூர், விஜய்வசந்த், அசன் மவு லானா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மேனாள் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பெ.விஸ் வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment