மதுரை, செப். 13- தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களால் மதுரை மாநகராட்சி பகு திகளை 5பகுதிகளாகப் பிரித்து பொறுப்பாளர் களை நியமனம் செய்து அறிவித்த முதலாம் பகு திக் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.-9.-2023 அன்று மாலை 6 மணிக்கு வண் டியூர் பி.கே.எம்.நகரில் சுப.பெரியார்பித்தன் இல் லத்தில் நடைபெற்றது.
சுப.பெரியார்பித்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதூர், அண்ணாநகர், யாகப்ப நகர், அனுப்பா னடி, விரகனூர், பகுதி தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் பகுதிக் கழகப் பகுதிகளில் தொடர்கூட்டங்களை நடத்தி கழகத்தில் உறுப் பினர்களை இணைக்க உறுதியேற்றனர்.
கூட்டத்தில் தலைமை கழக அமைப்பாளர் வே. செல்வம், மாவட்ட தலை வர் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம், மாவட்ட துணை தலை வர் பொ.பவுன்ராஜ், மாவட்ட துணை செய லாளர் பீபீகுளம் சுரேஷ், பெரியார் பெருந்தொண் டர் வண்டியூர் கிருஷ்ண மூர்த்தி, புதூர் பாக்கியம், பகுதிபொறுப்பாளர்கள் ஏ.மணிராஜ், தனுஷ் கோடி மோதிலால், பெரி.காளியப்பன், மாரிமுத்து, இளைஞரணித் தலைவர் கணேசன், பேக்கரி கண் ணன், முரளி, ஓட்டுநர் தியாகராஜன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
புதியதோழர்கள் குலசேகரன்,அறிவுமணி ஆகியோர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். கூட்டத் தில் பேசிய சுப.பெரியார் பித்தன் நடந்துவரும் தமிழர்தலைவரின் 90ஆவது பிறந்த நாளை அடையாளப்படுத்தி மதுரை மாநகர் முழுவ தும் தொடர்ந்து 100 கூட்டங்களை பொறுப் பேற்று நடத்துவதாக உறுதி கூறினார். அனை வருக்கும் தேநீர் சிற் றுண்டி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment