பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடை கொடுக்கும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி புறக்கணிக்கப்பட்டது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 20, 2023

பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடை கொடுக்கும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி புறக்கணிக்கப்பட்டது ஏன்?

திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

புதுடில்லி, செப்.20 பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டடத்தின் மய்ய மண்டபத்தில் நேற்று  (19.9.2023) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை குடியரசுத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர் தலைமை தாங்கினார்.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு மாறுவதற்கான விழாவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதிமுர்முவை அழைக் காதது ஏன் என்று திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர் டெரிக் ஓ பிரையன் கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலை தளத்தில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த நிகழ்வின் போது இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எங்கே இருந்தார்? அவர் அழைக் கப்பட்டாரா? குடியரசுத்தலைவர் புறக்கணிக்கப் பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த மே மாதம் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் 21 எதிர்க்கட்சிகள் அந்த விழாவை புறக்கணித்தன.


No comments:

Post a Comment