சனாதன எதிர்ப்பு என்பது, சனாதன ஒழிப்பு என்று மாறியுள்ளது பாராட்டத்தக்கது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

சனாதன எதிர்ப்பு என்பது, சனாதன ஒழிப்பு என்று மாறியுள்ளது பாராட்டத்தக்கது!

 சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சியுரை!

சென்னை. செப். 2- சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றி னார். 

சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலை ஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு இன்று (2.9.2023) காலை தொடங்கி இரவு  வரை நடைபெறுகிறது.

காலை மாநாட்டின் தொடக் கத்தில் சிகரம் செந்தில்நாதன் தலைமையில் சனாதன ஒழிப்பு மாநாட்டின் வரவேற்புக்குழுச் செயலாளர் புதுகை பூபாளம் தோழர் பிரகதீஸ்வரன் வரவேற் புரை ஆற்றினார். மாநாட்டின் வர வேற்புக்குழுத் தலைவர் தோழர் ரோகிணி  உரையாற்றினார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் தமுஎக சங்கம் சார்பில் மாநாட்டு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப் பட்டது.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற் றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டா லின்,  ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், அகில இந்திய வழக் குரைஞர்கள் சங்க மாநில செயலா ளர் ச.சிவக்குமார் வாழ்த்துரை ஆற்றினர்.

தமுஎகச கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 சனாதன எதிர்ப்பு போராளிகள் தந்தைபெரியார், சிந்தனைசிற்பி சிங்காரவேலர், அண்ணல் அம் பேத்கர், ரெட்டைமலை சீனிவா சன், அறிஞர் அண்ணா, முத்தமிழ றிஞர் கலைஞர், மூவலூர் ராமா மிர்தம், டாக்டர் முத்துலட்சுமி, நடிகவேள் எம்.ஆர்.ராதா, அய்யா வைகுண்டர், சிறீ நாராயணகுரு, மகாத்மா அய்யன்காளி ஆகியோ ரது நினைவைப்போற்றும் வகை யில் நினைவுச்சுடர்  தமுஎகச சார் பில் பல்வேறு மாவட்டங்களிலி ருந்து எடுத்துவரப்பட்டு மாநாட்டு அரங்கில் மாநாட்டு பொறுப்பா ளர்களிடம் அளிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் தனது உரை யின் தொடக்கத்தில், மாநாட்டின் தலைப்பை முதலில் பாராட்டிப் பேசினார். சனாதன எதிர்ப்பு மாநாடு என்பது சனாதன ஒழிப்பு மாநாடு என்று மாறியிருப்பதை தனது பாராட்டுக்கான காரண மாக எடுத்துக் கூறினார். இது இன்றைய சூழலில் மிகவும் அவசிய மானது என்று கூறிவிட்டு, ‘சனா தனம் என்றால் என்ன?’ என்பது பற்றி விளக்க முற்பட்டார். அதற்கு ஹிந்து பனாரஸ் பல்கலைக்கழகத் தில் பனாரஸ் சென்ட்ரல் ஹிந்து கல்லூரி பி.ஏ. பாடமாக 1916 ஆம் ஆண்டு இருந்த புத்தகத்திலிருந்து படித்துக் காட்டினார். ’சனாதன தர்மம் என்றால், நித்தியமான மதம் அல்லது புராதன மதம். இது வெகு காலத்திற்கு முன்னால் இருந் தது. இது வேதங்களை ஆதாரமாகக் கொண்டது. இந்த மதத்திற்கு ஆரிய மதம் என்ற பெயரும் இடப் பட்டிருக்கின்றது. இது ஆரிய மகா ஜாதியாருள் முதல் பிரிவினருக்குக் கொடுக்கப்பட்டது. பின்னாளில் இது இந்து மதம் என்று அழைப் பட்டது’ என்று எடுத்துக் காட்டி, இந்து மதம் தான் சனாதன மதம் என்பதை நிறுவினார். தொடர்ந்து, சனாதன மதத்தை கொசு ஒழிப் போடு ஒப்பிட்டுப் பேசினார். 

பின்னர் பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த ஒப்பீட்டைச் சொல்லி தனது உரையை தொடங்கி அனைவரை யும் திரும்பிப் பார்க்க வைத்தார். 

முதல் அமர்வு முடிந்தவுடன், இந்திய விடுதலைப் போராட்டத் திற்கு ஆர்.எஸ்.எஸ். என்ன செய் தது? என்று புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பெற்றுக்கொண்டார். 

அதில் முதல் பக்கத்திலும், கடைசி பக்கத்திலும் ஓவியங்கள் இருந்தன. முதல் ஓவியம் ஒரு கால ணியை ஆர்.எஸ்.எஸ்.காரர் நக்குவ தைப் போல வரையப்பட்டிருந்தது. மற்ற பக்கங்கள்  ஆர்.எஸ்.எஸ். எதுவும் செய்யவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவது போல எதுவும் இல்லாமல் இருந்தது. ஆசிரியர், அமைச்சரிடம் வெறும் தாளில் எதையாவது வரைந்து விடுவார் கள். ஆகவே நீங்கள் ஜீரோவைப் போடுங்கள் என்று கூறியதும் அனைவரும் வெடித்துச் சிரித் தனர். அமைச்சரும் இரண்டாம் பக்கத்தில் ஜீரோ வரைந்தார். 

நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிகரம் செந்தில்நாதன், கவிஞர் நந்தலாலா, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், பகுத்தறி வாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் வருகை தந்திருந் தனர்.

No comments:

Post a Comment