போக்சோ சட்டம் வயதை குறைக்கக் கூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

போக்சோ சட்டம் வயதை குறைக்கக் கூடாது

 ஒன்றிய அரசுக்கு சட்ட குழு பரிந்துரை

புதுடில்லி, செப்.30 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறலைத் தடுக்கும் நோக்கில் ஒன்றிய அரசு 2012-ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தைக் கொண்டு வந்தது.

அதேசமயம், 18 வயதுக்குட்பட்டவர்கள் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவு கொண்டாலும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில், பரஸ்பர சம்மதத்தின் அடிப் படையில் உறவுகொள்வதற்கான வயது வரம்பை 18-லிருந்து 16 -ஆக குறைக்க கடந்த ஆண்டு டில்லி உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வயது வரம்பைக் குறைப்பதற்கான விவாதம் தீவிரமடைந்தது. 

இந்நிலையில் போக்சோ சட்டத்தில் வயது வரம்பைக் குறைக்க வேண்டாம் என்று 22-ஆவது சட்டக்குழு ஒன்றிய அரசுக்கு ஆலோ சனை வழங்கியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை, ரிது ராஜ் தலைமையிலான 22-ஆவது சட்டக்குழு ஒன்றிய சட்ட அமைச்சகத் திடம் தாக்கல் செய்துள்ளது. போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைத்தால், அது குழந்தைத் திருமணம், குழந்தைக் கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றுஅந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment