இஸ்ரோவின் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளுக்கு நேரடி வர்ணனை செய்து வந்த தலைசிறந்த வர்ண னையாளர் என்ற பெருமை பெற்றவரும், 1984இல் இஸ்ரோ நிறுவனத்தில் பணி யில் சேர்ந்து 2011ஆம் ஆண் டில் ஜீ-சாட் 12 பணியின் திட்ட இயக்குநராக உயர்ந்து பல பொறுப்புகளில் முத்திரை பதித்தவருமான திருமதி வளர்மதி அவர்கள் தனது 54ஆம் வயதில் நேற்று (4.9.2023) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
அவர் அரியலூரில் தமிழ் வழியில் படித்து முன்னேறியவர்.
அவரது மறைவு அவர் குடும்பத்திற்கும், இஸ்ரோ அறிவியல் குடும்பத்திற்கும் மட்டும் இழப்பல்ல; அறிவியல் துறைக்கும், விண்ணியல் ஆய்வுத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், குடும்பத்தாருக்கு ஆறுதலும் உரித்தாகுக.
ஆசிரியர் கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
5.9.2023
No comments:
Post a Comment