அட, ஜோதிடமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 25, 2023

அட, ஜோதிடமே!

இந்த வெட்கக்கேட்டை  கேளுங்கள்! கேளுங்கள்! கால்பந்து விளையாட்டுக்கு இந்திய வீரர்களைத் தேர்வு செய்ய - அகில இந்திய கால்பந்து சம்மேளனம் யாரிடம் யோசனை கேட்டது தெரியுமா?

அந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் யாரும் வாயால் சிரிக்கமாட்டார்கள்.

பி.டி.அய். செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

டில்லியில் உள்ள ஒரு ஜோதிட நிறுவனத்தோடு இந்திய கால்பந்து சம் மேளனம்  ஒப்பந்தம் போட் டுள்ளது.

இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.16 லட்சமாம். இதுபற்றி இந்திய கோல் கீப்பர் தனுமாய் போஸ் கூறுவதைக் கேளுங்கள், கேளுங்கள்!

‘‘ஜோதிடரை அணுகிய தன்மூலம் இந்திய கால்பந்து கூட்டமைப்பு உலக அரங் கில் பெரிய அளவில் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. எந்த அள வுக்கு இந்திய கால்பந்து சம்மேளனம்  சென்று இருக்கிறது தெரியுமா? வெளிநாடுகளுக்கு சொகுசு சுற்றுலாவுக்கும் இந்த ஜோதிடர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

மற்றவற்றிற்கு எல்லாம் தகுதி - திறமை பேசும் கூட்டம், உண்மையிலேயே தகுதி - திறமை பார்க்க வேண்டியது விளை யாட்டில்தான் என்பதை வசதியாக மறந்துவிட்டது என்பதைவிட மறைக்கப் பார்க்கிறது.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசார ணைக் குழு  -அகில இந்திய கால்பந்து சம்மேளன அதிகாரி ஒருவரிடம் ஜோதிட நிறுவனம் நிய மனம் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய போதுதான் இந்தப் பித்த லாட்டம் வெளியில் வந்தது.

கால்பந்து விளை யாட்டு வீரர்களின் பெயர்ப் பட்டியலை ஜோதிடரிடம் கொடுத்து, ஜாதக அடிப்படையில் ஜோதிடர்களால் தேர்வு செய்யப்பட்டார்களே - அதன் முடிவு என்ன?

சீனாவில் ஹாங்ஸுவில் நடைபெற்ற கால்பந்து போட் டியில் 5-க்கு ஒன்று கோல் விகிதத்தில் சீனாவிடம் மண்ணைக் கவ்வியதுதான் மிச்சம்!

கிரிக்கெட்டில் நடந்த ஒரு கூத்து நினைவிருக்கிறதா?

பெங்களூருவில் 1987 இல் இங்கிலாந்திற்கும், இந்தியாவுக்குமிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது  சாயி பாபா ஆசீர்வதித்துக் கொடுத்த மோதிரத்தை அணிந்து கொண்டு விளை யாடினார் கவாஸ்கர். அந்த ஆட்டத்தில் அவர் எடுத்த ஓட்டம் வெறும் இரண்டே இரண்டுதான். சாயிபாபாவிடம் ஆசி பெறாத இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் ஆட்டம் இழக்காமல் எடுத்த ஓட்டங்கள் 72.

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது மவுடீக மூடநம்பிக்கைக் கூட்டம்?

 -  மயிலாடன்


No comments:

Post a Comment