மருந்தியல் ஆராய்ச்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு முதல் பரிசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

மருந்தியல் ஆராய்ச்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு முதல் பரிசு

கோயம்புத்தூர்  R.V.S.  மருந்தியல் கல்லூரி யில்  “Strategy, Concepts and Challenges in Drug Discovery & Development” என்ற தலைப்பில் 27.07.2023 முதல் 28.07.2023 வரை   இரண்டு நாள்கள்  நடைபெற்ற பன் னாட்டுக் கருத்தரங்கில்  பெரியார் மருந்தியல் கல்லூரி யின் இளநிலை மருந்தியல் நான்காமாண்டு மாணவர்கள் ஆர். வசந்த் மற்றும் வி. விஜய பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் மாணவர் ஆர். வசந்த் தமிழர்களின் பாரம்பரிய அரிசி உணவுகளில் உடற்பருமன் குறைப்பு பொருள்கள் இருப்பதை தம் ஆய்வுக் கட்டு ரையில் சமர்ப்பித்து முதல் பரிசாக 

ரூ. 5000/- பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். 

பரிசு வென்ற மாணவரை கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்து களைத் தெரிவித்துக் கொண்டனர். பன்னாட் டளவில் நடைபெற்ற  இக்கருத்தரங்கில் 

30-க்கும் மேற்பட்ட கல்லூரியிலிருந்து 60 மாண வர்கள் தமது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப் பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment