கருநாடகத்தில் தேர்தலுக்கு முன்னால் வெளியான புத்தகம், "ஆர்.எஸ்.எஸ்.சின் ஆழமும் அகலமும்". கன்னடத்தில் பல லட்சக் கணக்கான பிரதிகள் விற்று, பெரும் வரவேற்பை பெற்றுள்ள புத்தகம்.
இந்நூலை எழுதியுள்ள தேவனூர மகாதேவா, சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர். இந்த நூலை 44 பக்கத்தில் தமிழில் கனகராஜ் பால சுப்பிரமணியம் மொழி பெயர்க்க, பாரதி புத்தகாலயம் வெறும் 25 ரூபாய் விலை வைத்து வெளியிட்டுள்ளது.
என்ன சொல்கிறார், மகாதேவா. RSS இந்திய சமூகத்தை கவ்விப் பிடித்துள்ள நச்சரவம். அதன் பிடியில் இருந்து இந்திய சமூகம் விடுபட வேண்டும். அதற்கு ஒரு எளிய உதாரணம் சொல்கிறார்.
கிராமப்புறங்களில் திருடர்கள் புகுந்து விட்டால் என்ன செய்வார்கள். எல்லோரும் விழித்திருப்பார்கள். இளை ஞர்கள் தெருத்தெருவுக்கு திரண்டு நின்று கையில் கிடைத்த ஆயுதங்களைக்கொண்டு வழி மறிப்பார்கள். பெண்கள் மிளகாய்த்தூளை ஆயுதமாக் குவார்கள். எல்லா வழிகளிலும் வினை யாற்றுவார்கள். அதே போல் விழிப்புடன் இருங்கள் என்கிறார்.
சரி, வெறுப்பூட்டப்பட்ட வெறியூட் டப்பட்ட மந்தை மனநிலை கொண்ட கும்பல் வெறி என்ன செய்யும்?. அது எல்லாரையும் அழித்து விட்டு, கடைசியில் தன்னை ஏவி விட்டவனையே அழித்து விடும். எப்படி ஆனாலும், நாம் ஏமாந்து போனால் அழிவு தான் மிஞ்சும்.
எனவே, அழியாது பிழைத்திருக்க வேண்டுமானால், நீங்கள் விழித்திருக்க வேண்டும்; ஒருவரோடு ஒருவர் ஒற்றுமை யோடு சேர்ந்திருக்க வேண்டும்; எல்லோ ரையும் விட நாங்களே சிறந்தவர்கள் என்ற தலைக்கனம் இருக்கக்கூடாது; இந்த வேலையைச் செய்ய எங்களால் மட்டுமே இயலும் என்ற ஆணவம் இருக்கக் கூடாது என்கிறார், தேவனூர மகாதேவா!. எனவே, நீங்கள் பிழைத்திருக்க வேண்டுமால், விழித்திருங்கள்!!
- சூர்யா, சென்னை.
No comments:
Post a Comment