இளமைக் காலந் தொட்டே சுதந்திர உணர்ச்சி யோடு விளங்கிய பெரியார். 1910-1919 ஆண்டுக் காலத்தில் பல்வேறு பொது நல அமைப்புகளில் பங்கு கொண்டு, 29-க்கும் மேற் பட்ட பதவிகளிலிருந்தார்.
சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன் பெரியார் வகித்த கவுரவப் பதவிகள்:
1. 1915 -1919 ஈரோடு - வியாபார சங்கத் தலைவர்
2. தென் இந்திய வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினர்.
3. அய்ந்து ஜில்லாகளுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்
4. ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி.
5. பழைய மாணவர் சங்க செக்ரட்டரி
6. ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி
7. ஹைஸ்கூல் போர்டு தலைவர்
8. 1914 - கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி
9. பத்து ஆண்டுகள் ஆனரரி மாஜிஸ்ரேட்
10. ஈரோடு தாலுக்கா போர்டு பிரசிடென்ட்
11. ஈரோடு முனிசிபல் சேர்மன்
12. ஜில்லா போர்டு மெம்பர்
13. வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி
14. பிளேக் கமிட்டி செக்ரட்டரி
15. கோவை ஜில்லா 2ஆவது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரி - 10 ஆண்டு
16. கோவை ஜில்லா தேவஸ்தான கமிட்டி வைஸ் பிரசிடெண்ட்
17. கோவை ஜில்லா தேவஸ்தான கமிட்டி பிரசிடென்ட், 1920 வரை
18. 1918 உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்.
19. 1918-யுத்தத்தில் தாலுக்கா, ஜில்லா அரிசி கண்ட்ரோலிக் டிஸ்ரிபியூட்டிங் ஆஃபீசர்.
20. கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி.
21. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி.
22. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்.
23. காதி போர்டு ஃபவுண்டர், அமைப்பாளர்
24. காதி போர்டு தலைவராக 5 ஆண்டுகள்
அவர்தம் இளமைப் பருவம் முதற்கொண்டே பெரியார் ஜாதி, சமய வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்காதவர். பெரியார் அவர்கள் ஈரோடு நகராட்சி மன்ற தலைவராக இருந்த காலத்தில், காங்கிரசில் புகழோடு திகழ்ந்த திருவாரூர் வி.கல்யாணசுந்தர முதலியார், சேலம் நகராட்சி மன்றத் தலைவர் சி.இராஜகோபாலச்சாரியார், சு. வரதராஜூலு நாயுடு ஆகியோரின் விருப்பத்துக்கிணங்க பெரியார் தம்மைக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். சில காங்கிரஸ் மாநாடுகளில் பங்கு கொண்டும், காங்கிரசுக்குள்ளே சென்னை மாகாண சங்கத்தில் சேர்ந்து பார்ப்பனரல்லாதாருக்கு பதவிகளில் விகிதாச்சாரம் அளிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தும் பணியாற்றிய பெரியார், 1919-ஆம் ஆண்டுதான் காங்கிரசில் உறுப்பினராகச் சேர்ந்தார்.
No comments:
Post a Comment