கிருட்டினகிரி மாவட்ட மகளிரணித் தோழர் ப.மங்களாதேவி மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

கிருட்டினகிரி மாவட்ட மகளிரணித் தோழர் ப.மங்களாதேவி மறைவு

கிருட்டினகிரி, ஆக.25- கிருட் டினகிரி மாவட்ட பகுத்தறி வாளர் கழக தோழர் இரா.பழனியின் வாழ்விணைய ரும் மத்தூர் ஒன்றிய மக ளிரணி பொறுப்பாளருமான ப.மங்களாதேவி மறைவுற் றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தந்தை பெரியார், தமிழர் தலைவர் மீது மிகுந்த பற்றுக் கொண்ட கொள்கை வீராங்கனை. இயக்கத்தால் நடத்தப்படு கின்ற அனைத்துப் போராட்டங்களிலும் பொதுக் கூட்டங்களிலும்   பங்கேற்று சிறப்பித்தவர். இவரின் மறைவு என்பது இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.

 மத்தூர் அடுத்த பாண்டவர்குட்டை கிராமத்தில் பல்வேறு கழக நிகழ்வுகள் இவர் இல்லத்தில் நடந்த போதும்,கழகத்தவர்கள் இவர் இல்லம் செல்லும் போதும் மிகுந்த மகிழ்வோடு வரவேற்று உபசரிப்பார், கொள்கையில் மன உறுதியோடு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர். பாண்டவர்குட்டை பெரியார் சிலை திறப்பு விழாவின்போதும், இவர் இல்லத் திறப்பு விழாவின்போதும் ஆசிரியர் அவர்கள் பங்கேற்ற போது, உற்றார் - உறவினர்களையெல்லாம் பங்கேற்கச் செய்து மிகப்பெரிய விழா ஏற்பாட்டிற்கு உறுதுணையாக நின்றவர்.தமிழர் தலைவரின் எடைக்கு எடை பனைவெல்லம் வழங்கிய நிகழ்வுகள் மகளிரணி சார்பில் நடத்தப்பட்டதில் இவர் பெரும் பணியாற்றினார். 

இறுதி நிகழ்வு நேற்று (24.8.2023) மாலை 3 மணிக்கு பாண்டவர் குட்டையில் நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத் தப்பட்டது.

அம்மையார் மங்களாதேவி அவர்களுக்கு வீர வணக்கத்தையும் அவரை பிரிந்து வாடும் உறவினர் களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment