சென்னை,ஆக.9 - முத்தமிழறிஞர் கலைஞர் 5ஆம் ஆண்டு நினைவு நாளை (7.8.2023) முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவ ரது நினைவிடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
”முத்தமிழறிஞர் கலைஞர் மறையவில்லை. எலும்பு சதை நரம்பு இருக்கும் உடல் தான் மறைந்து போகும் தத்துவங்கள் மறைவதில்லை. இந்த நிமிடம் வரை கலைஞர் சமூகத்துக்கு தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறார். சமூகத்துக்குத் தேவைப்படும் தத்துவங்கள் என்றும் மறைவதில்லை; இப்போதும் தேவைப்படுகின்றன.
ஹிந்தியை அனைவரும் எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள்களுக்கு முன்பு சொன்ன கருத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வருத் தத்தை அளித்துள்ளது.
ஹிந்தியை எதிர்க்காமல் ஏற்க வேண்டும் என்று கருத்து சொல்லி இருக்கிறார். எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ள ஹிந்தி என்ன குழந்தையின் முத்தமா?
"தமிழர்கள் இந்தியின் எதிராளி கள் அல்ல; ஹிந்தித் திணிப்பின் எதிராளிகள், அதில் தமிழர்கள் தெளிவாக உள்ளனர். தென் இந் தியா முழுக்க தமிழ் பேசப்பட்டது, அதை அம்பேத்கர் பதிவு செய்து உள்ளார்.
கிருஷ்ணா, துங்க பத்ரா நதிக் கரைகளில் தமிழ் பேசப்பட்டு வந்தது; அது தெலுங்கு ஆனது, சமஸ்கிருதம் கலந்து தமிழை பிரித்து விட்டது என்று மொழியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின் றனர். ஹிந்தி, சமஸ்கிருதத்தின் இன்னொரு வடிவம், சமஸ்கிருதத் தின் நீட்சியாக இருக்கும் ஹிந்தியை மட்டும் எப்படி ஏற்க முடியும்?
தமிழ்நாட்டின் தமிழர்களின் இன உணர்வோடு, மொழி உணர்வோடு கலைஞர் வாழ்வார்.
முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும், கலைஞரின் கொள்கைகளை அவர் தாண்டப் பார்ப்பதில்லை, தாண்டப் பார்ப் பது அவரின் சாதனைகளை தான்.
கலைஞரை இளைஞர்கள் மறந்து விட கூடாது. தமிழ்நாட்டில் பேசப்படுகின்ற தமிழாவது, தமி ழாகவே பாதுகாக்கப்பட வேண் டும் என்பதற்காக தான் ஹிந்தியை எதிர்க்கிறோம்". இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment