அரியலூர் ப.க. கருத்தரங்கில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கருத்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

அரியலூர் ப.க. கருத்தரங்கில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கருத்துரை

 அறியாமைஇருள்நீக்க அறிவு விளக்கை ஏற்றுங்கள்!

அரியலூர், ஆக.31- அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டாக்டர் நரேந் திர தபோல்கர் நினைவு நாள் மற்றும் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் சிறப்புக் கருத்தரங்கம் 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி அரியலூர் கோவை கிருஷ்ணா இனிப்பக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தங்க.சிவமூர்த்தி தலைமையில், மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், உதவி கோட்டப் பொறியாளர் பெ. நடராஜன், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் துணை முதலமைச்சர் ராஜா. கென்னடி தலைமை யாசிரியர் இரா. அருமைக்கண்ணு, தலைமை யாசிரியர் ஆ.அல்லி, திருக்குறள் ஞானமன்ற நிறுவனர் ம.இராவணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் துரை.சுதாகர் வரவேற்புரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  தலைமையாசிரியர் மு. ஜெயராஜ்  தொடக்க உரையாற்ற, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச் செயலாளர் இ. ராஜேந்திரன் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார்.

ஆசிரியர்கள் வி.சிவசக்தி, அ.புன்னகை, முதுகலை ஆசிரியர் அ.வெள்ளைச்சாமி இணைப் பேராசிரியர் ஆ.அருள், தலைமைக் கழக அமைப்பாளர்க. சிந்தனைச்செல்வன், ஆகியோர் உரையாற்றியதற்கு பின்னர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனை வர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில்,

திராவிட இயக்கத்தின் தீரர்கள்

திராவிட இயக்கத்தின் தீரர்கள் புரட்சிகர கொள்கைகள் கொண்டவர்கள் நிறைந்த அரியலூர் மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெறக்கூடிய நரேந் திர தபோல்கர்  நினைவு நாள் மற்றும் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் சிறப்பு கருத் தரங்கம் என்பது பாராட்டுக்குரியது. அறிவு மதிக்கப்படும் நாடே சிறந்த நாடு அறிவாளிகள் அச்சத்தோடு வாழ வேண்டிய நிலையில் இந்த நாட்டை மதவாதிகள் வைத்திருக் கிறார்கள். அறிவாளிகள் சிலையாக இருப் பதையே தாங்கிக் கொள்ள முடியாத மதவெறி கூட்டம் டாக்டர் நரேந்திர தபோல்கர், கவுரி லங்கேஷ், கல்புர்கிபோன்றவர்களை படு கொலை செய்திருக்கிறது. அவர்கள் செய்த குற்றம் என்ன? அறிவை பயன்படுத்த சொன் னது குற்றமா? சிந்திக்கத் தூண்டியது குற்றமா? பகுத்தறிவை பயன்படுத்த சொன்னது குற்றமா?அறிவியல் மனப்பான்மையை ஒவ்வொருவரும் பெற வேண்டும். எதையும் ஏன்? எதற்கு? என்று கேட்க வேண்டும்.

தொலைநோக்கோடு அறிவியல் சிந்த னையை விதைத்தவர் தந்தை பெரியார். அவர் ஒரு சமுதாய விஞ்ஞானி.

சாணியை காலில் மிதித்தால் சாணி என்று கழுவும் மக்கள், அதையே பிடித்து வைத்து அருகம்புல்லை வைத்தால் கடவுள் என்று கருதுவது மூடநம்பிக்கை அல்லவா? என்று கேட்டவர் பெரியார்.ஜாதியை அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்தால் ஏற்க முடியுமா?பேய், பிசாசு, பில்லி சூனியம், கயிறு கட்டுதல் போன்ற மூடநம்பிக்கைகளை மாண வர்களுக்கு விளக்கிச் சொல்லி அறியாமை இருள்நீக்கி அறிவு விளக்கை ஏற்றுங்கள் என்று கூறி சிறப்புரையாற்றினார். 

பங்கேற்றோர்

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு. அறிவன், மாவட்ட இளைஞரணி தலைவர் க. கார்த்திக், அரியலூர் ஒன்றிய தலைவர் 

சி. சிவக்கொழுந்து, பொறியாளர் கோவிந்த ராஜன், ஆட்டோ தர்மா, அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் வி.ஜி. மணிகண்டன் செயலாளர் கமலக்கண்ணன், விளாங்குடி ரவீந்திரன் எட்வின், சரவண பாபு, சரத்குமார் பிரகாஷ், மாவட்ட அமைப்பாளர் ரத்தின. ராமச்சந்திரன், ஆண்டிமடம் ஒன்றிய தலை வர் இரா.தமிழரசன் செயலாளர் தியாக.முரு கன், நகர செயலாளர் டி.எஸ்.கே.அண்ணா மலை,  ஒன்றிய துணைச் செயலாளர் த.கு பன்னீர்செல்வம், ப.சுந்தரமூர்த்தி, செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன் ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் இரா. இந்திரா காந்தி, டாக்டர் தமிழ்மணி, பொறி யாளர் ஆ.இலக்கியா, அரியலூர் அரங்க நாடன், உல்லியக்குடி வை. கலையரசன், அ.சங்கர், உதவி செயற்பொறியாளர் க.ராஜேந் திரன், வேளாண்மை உதவி இயக்குநர் ஆ.சாந்தி, மேனாள் நகராட்சி கவுன்சிலர் எஸ். எம்.சந்திரசேகர், உதவி தோட்டக்கலை அலுவலர் சா.மோகன்ராஜ், சத்யா மோகன் ராஜ், அரசு போக்குவரத்து கழகம் சுந்தர மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் கி. கட்ட பொம்மன் கணக்கீட்டு ஆய்வாளர் இரா.கண் ணன், சுகாதார ஆய்வாளர் கோ. பச்சமுத்து, பொறியாளர் சார்லஸ், ஆசிரியர் கு.அறி வழகன், தலைமை ஆசிரியர்கள் ப.கொளஞ்சிநாதன், எஸ்.பி. தமிழ்ச்செல்வன், கு. மங் கையர்க்கரசி, அய்யம்பெருமாள், சின்னதுரை, சி. இளங்கோ, ஆசிரியர்கள் ந. செந்தில்குமார் இரா.ராஜேஷ் அ.அமுதலட்சுமி, மு. கோவிந்த சாமி செ. நடராஜன் செ. மோகன், வெ. ராமகிருஷ்ணன், இரா. தமிழரசன், ந. ரவி, 

பி.சிவராமன், ச. கனிமொழி, ஜோதி, த.காயத்ரி பொ.வேல்முருகன்,  சி.வீரவேல், ப.அருள், வேலரசி, கண்ணகி, முத்துக்குமரன் மற்றும் சேடக்குடிக்காடு மோகன், இளங்கோ, செந்தில், வீராக்கன் ரமேஷ், கவிஞர் அறிவு மழை, லட்சியா, அல்லிநகரம் ராமச்சந்திரன், தெற்கு பட்டி ஜெயலட்சுமி அமுத கண்ணன் குழுமூர் பாரிவள்ளல், நல்ல நாயகபுரம் சக்திவேல், செந்துறை அன்பரசன், ராம கண்ணன், வீராசாமி உள்ளிட்ட ஏராளமான பகுத்தறிவாளர்களும் கழக பொறுப்பாளர் களும் பங்கேற்று சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment