ராஜஸ்தானில் புதிதாக உரு வாக்கப்பட்ட 17 மாவட்டங்கள் திங்கள்கிழமை முதல் நிர்வாக ரீதியான செயல்பாட்டைத் தொடங்கின. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அசோக் கெலாட் பேசிய தாவது:
பிரதமர் மோடி ஒரு மாய உலகில் வாழ்ந்து வருகிறார். எனவே, தன்னை ஹிந்துக்களுக்கும், பாஜகவினருக்கும் மட்டுமே பிர தமர் என்று கருதிக் கொள்கிறார். அவரது பேச்சு, நடத்தை, உடல் மொழி அனைத்துமே இதைத்தான் பிரதிபலிக்கின்றன. இது மிகவும் அபாயகரமான செயல். காங்கிரஸ் கட்சியின் பல ஆண்டுகால ஆட்சி யால் கட்டிக்காக்கப்பட்டு வரும் நாட்டின் ஜனநாயகம் மற்றும் சிறப்பான தேர்தல் நடைமுறை மூலம்தான் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உலகின் மிகப்பெரிய தலை வராக மோடி உருவெடுத்துள்ளதாக கூறிக் கொள்கிறார்கள். அப்படி யென்றால் மணிப்பூர் வன்முறை தொடர்பாக உலகம் என்ன கூறு கிறது என்று அவர் கருத்தில் கொள்ள வேண்டாமா? பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல் லும்போது மிகவும் மரியாதையாக நடத்தப்படுகிறார்.
அதற்கு முக்கியக் காரணம் அவர் காந்தி பிறந்த நாட்டில் இருந்து வருகிறார் என்பதும், உலகின் பெரிய ஜனநாயக நாட்டில் இருந்து வருகிறார் என்பதும்தான். நாட்டின் ஜனநாயகத்தை இத் தனை ஆண்டுகளாக சிறப்பாக வழி நடத்தியது காங்கிரஸ்தான் என்பதை மறந்துவிட வேண்டாம்.
மணிப்பூர் பெண்களுக்கு நடந்த கொடூரத்தைப் பற்றிப் பேசும் போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள ராஜஸ்தானிலும், சத்தீஸ் கரிலும் பெண்களுக்கு எதிராக கொடுமை நடப்பதாக பிரதமர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
இது பாதிக்கப்பட்ட பெண்களை அவமதிக்கும் செயலாகும் என்றார்.
No comments:
Post a Comment