1000 மாணவ-மாணவிகள் பங்கேற்று மகிழ்ச்சி ஆரவாரம்!
அரூர், ஆக. 31 தருமபுரி மாவட்டம், அரூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மணியம்மை கல்வி நிறுவனம் இணைந்து அரூர் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம் 25.8.2023 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் அறி வியல் மனப்பான்மையும், வாழ்வியல் நெறிமுறை களும் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செய லாளரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வருமான அரூர் சா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சிவகாமி வரவேற்புரையாற்றினார்.பகுத்தறிவுடன் பயணிக்கவேண்டும்!
கல்லூரி முதல்வர் முனைவர் மங்கையர்க்கரசி தொடக்க உரையாற்றினார். மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும், அறிவியல் கல்வி என்பது வேறு, அறிவியல் மனப்பான்மை என்பது வேறு, என்றும் அறிவியலை படித்து தெரிந்து கொள்வது அறிவியல் கல்வி, பகுத்தறிந்து அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்து செயலாற்றுவது அறிவியல் மனப்பான்மை. மாணவர்களிடம் உள்ள பல்வேறு வகையான வேறுபாடுகளை கலைந்து பகுத்தறிவுடன் பய ணிக்க வேண்டும் அதற்காகத்தான் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கலைஞர், காமராசர், ஆசிரியர் வீரமணி, போன்றவர்கள் எல்லாம் நாடெங்கும் மக்களிடம் விழிப்புணர்வு பெற பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். எனவே அரூர் கல்லூரி மாணவர்கள் சிறப்பானவர்கள், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வாழ்வி யலை கடைப்பிடித்து மாணவர்கள் அறிவியல் மனப்பான்மையோடு வாழ வேண்டும்.என்று திரா விடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் கருத்துரை யாற்றினார்.
அறிவியல் சிந்தனையுடன் வாழ வேண்டும்
அதைத் தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் பேசும்போது, நான் அரூர் நகருக்கு புதியவன் அல்ல. அரூர் பகுதி யில் உள்ள பள்ளிகளில் எல்லாம் பேசியிருக்கி றேன். இன்றைக்கு அரூர் அரசு கலைக் கல்லூரியில் பெரியார் மணியம்மை கல்வி நிறுவனம் மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டை கொண்டாடு வதுடன் அறிவியல் சிந்தனையுடன் வாழ வேண் டும் என்பதற்காக பல நூல்களை எழுதி மக்கள் மத்தியில் விஞ்ஞானத்தை வளர்க்க அரும்பாடு பட்ட நரேந்திர தபோல்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெறும் கருத்தரங்கத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
காரணம் கலைஞர்
நான் தமிழ்நாடு அளவில் பல பள்ளிகள், கல் லூரிகள், பல்கலைக்கழகம் என பேசி இருக்கிறேன் ஆனால், அரூர் கலைக் கல்லூரி மாணவ மாண விகள் கட்டுப்பாடு மிக்கவர்களாக இருப்பதைக் கண்டு வியக்கிறேன். மாணவர்களிடம் உடையில் மாற்றம், உணவில் மாற்றம், கல்வியில் முன் னேற்றம், என்று பல மாற்றங்கள் வந்திருக்கிறது என்றால் அதற்கு அடிப்படை காரணம் அறிவிய லாகும். கல்விக்காக கிராமங்கள் தோறும் பள்ளிகளை உருவாக்கி மூன்று கிலோ மீட்டருக்கு நடுநிலைப்பள்ளி,அய்ந்து கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி,ஏழு கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி, வட்டார அளவில் அறிவியல் கலைக்கல்லூரி, மாவட்ட அளவில் மருத்துவக் கல் லூரி, என்றும் பல்கலைக்கழகங்களையும் உரு வாக்கி இருப்பதற்கு காரணம் கலைஞர் அவர்களே!
மாபெரும் சாதனையாகும்!
ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி வரை படிக்க இலவச கல்வி கொண்டு வந்தார். மதிய உணவு, பாட புத்தகங்கள், மிதிவண்டி, மகளிருக்கு கல்வி உதவித்தொகை, கல்வி வளர்ச்சிக்காக மாதம் ஆயிரம் ரூபாய் என அன்றைய முதல மைச்சர்களில் இருந்து இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை சிறப்பாக செய்து வருகிறார்கள். இது மாபெரும் சாதனையாகும். அந்த வகையில் மாணவர்கள் படிக்க வேண்டும் அந்த படிப்பு வெறும் படிப்பாக இல்லாமல் வாழ்வில் சார்ந்த, அறிவியல் சார்ந்த கல்வியாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும், அரசு பள்ளியில் படித்தவர்கள்தான் பல அறிவியல் மேதைகளாக உருவாகி இருக்கிறார்கள்.அப்துல் கலாமிலிருந்து, மயில்சாமி அண்ணாதுரையிலிருந்து, வனிதா, இன்றைய சந்திராயன் சரித்திர நாயகன் வீர முத்துவேல் வரை அறிவியலை படித்து சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த சாதனையை நீங் களும் பெற வேண்டும், இன்றைக்கு மாணவர்கள் பல்வேறு வகையான போதைப் பொருள் களுக்கு ஆட்பட்டு சீரழிந்துள்ளார்கள். அதில் குறிப்பாக பான்பராக், பான்மசாலா, குட்கா, அபின் போன்ற போதைப் பொருள்களால் சீரழிந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லால் மாணவர்கள் மத்தியில் ஜாதிக்கு என்று ஒரு கயிறு கட்டிக் கொண்டு ஜாதிய மோதலை உருவாக்கி அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள். அதிலிருந்து மாண வர்கள் வெளியே வரவேண்டும் அதனால் சமூகம் சீரழி கிறது அமைதி கெடுகிறது எனவே மாணவர்கள் அறிவியல் வாழ்வை பெருக்க மூடநம்பிக்கை அற்றவர்களாக வளர வேண்டும் சிறப்புரையில் மாணவர்களை பெரியார் செல்வன் கேட்டுக் கொண்டார்.
கோரிக்கை நிறைவேற்றம்
அத்துடன் கல்லூரி முதல்வரும், பேராசிரியர்களும் பேச்சாளர்கள் எதைப் பற்றி பேசுகிறார்களோ என்று தயக்கத்துடன் இருந் தோம். ஆனால், மாணவர்களின் முன்னேற்றத்திற் காக, கல்வி உயர்வுக்காக, கட்டுப்பாட்டு, விழிப் புணர்வு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி மேற் கொள்ளும் வகையில் உரையாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற நிகழ்ச்சியை மீண்டும் ஒருமுறை எங்கள் கல்லூரியில் வந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டு பெரியார் செல்வன் அவர்களையும் பொருளாளர் வீ. குமரேசன் அவர்களையும் பாராட்டி சென்றனர்.
அரூர் அரசு கல்லூரி புதிதாக ஏற்படுத்தப்பட்ட தால் சில அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை, நிகழ்ச்சிகள் நடத்த ஒலிபெருக்கி வசதி இல்லை என்று கல்லூரி முதல்வர் கோரிக்கை வைத்தார். அதை உடனடியாக செய்து கொடுப்பதாக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சா. இராஜேந்திரன் உறுதியளித்தார். அதற்காக நன்றி தெரிவித்து பேராசிரியர்களும், மாணவிகளும், கையொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
பங்கேற்றோர்
ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் குமார், விரிவுரையாளர் கே.மாரியப்பன், கவுரவ விரி வுரையாளர் கோபிநாத், பேராசிரியர் தமிழரசி, மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, மாவட்ட திராவிடர் கழக தலைவர் கு. தங்கராஜ், மாவட்ட செயலாளர் பூபதி ராஜா, கழக காப்பாளர் தமிழ்செல்வன், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கவிஞர் பிரேம்குமார், ஊத்தங்கரை ஒன்றிய தலைவர் பொன்முடி,செயலாளர் சிவராஜ், வேப்ப நத்தம் கல்பனா, மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக தமிழ் துறை பேராசிரியர் சிவகாமி நன்றி கூறினார் நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment