திருச்சி, ஆக.5 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநி லங்களில் கடற்கரையோரப் பகுதிகளில் நாட்டு நலப்பணித் திட்ட நாளான செப். 24-ஆம் தேதி ஒரு கோடி பனை விதைகளை நடும்பணிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் தன்னார்வலர்களுடன், ஒரு லட்சம் என்எஸ்எஸ் மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.
நிலத்தடி நீரைச் சேமிக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும் பனை மரங்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களின் எண் ணிக்கை முன்பு 50 கோடியாக இருந்தது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் படிப்படியாக அழிவுக்குள்ளாகி, தற்போது 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர் சேமிப்பை செறிவூட்டவும் பனை மரங்களின் எண்ணிக்கையை அதி கரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இதையடுத்து, தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களில் கடற் கரையோரப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை நட தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நலவாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, மாநில நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
No comments:
Post a Comment