கொடூர மறதி நோய் சிகிச்சை : புது வகை ஆய்வு! - ஒரு திருப்பம்
முதுமையில் உள்ளவர்களுக்கு மூவகை மறதி நோய்கள் ஏற்படு வதைத் தடுக்க, தவிர்க்க, இன் னமும் பல வகை ஆராய்ச்சிகளை மருத்துவ உலகம் தீவிரமாக செய்து வருகிறது! என்றாலும் தீர்வுகளும், நிவாரணங்களும் இன்னமும் முழு அளவில் கிட்டவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்!
1) அம்னீஷயா (Amenesia)
2) டிமென்ஷியா (Dementia)
3) அல்ஷைமர்ஸ் (Alzheimer's Disease)
ஆகியவை அம்மூன்று,
அரசியல்வாதிகளின் விவாதங் களில் கூட இந்த 'அம்னீஷியா'வை சொல்லாக்கமாகப் பயன்படுத்தி தங்கள் அரசியல் எதிரிகளை மடக்க என்ன 'செலக்டீவ் அம்னீ ஷியாவா?' என்று கிண்டலாக கேள்வி கேட்பதுண்டு.
இம்மூன்று வகையும் ஒவ்வொரு வகையில் வெவ்வேறான நோய்கள் ஆகும்!
மூன்றாவதான அல்ஷைமர்ஸ் என்ற நினைவு பறிக்கும் கொடும் நோய் - அதைக் கண்டறிந்த ஜெர்மன் டாக்டரின் பெயரையே அந்த நோய்க்கு சூட்டியுள்ளார்கள்!
சிங்கப்பூரில் நான் தங்கியி ருந்த ஓரிரு நாள்களில் படித்த தினசரியான "தி ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ்" (The Straits Times) என்ற ஆங்கில நாளேட்டில் வந்த செய்திக் குறிப்பில், Cancer என்ற புற்றுநோய்க்கு எப்படி மருத்துவர்கள் தர வரிசைப்படுத்தும் (நோயின் அளவீடு குறைத்தல்) முறையை, புதிதாய் 'அல்ஷைமர்ஸ் நோய்க் கும் பயன்படுத்தத் துவங்கி அந்த சிகிச்சை முறையில் மேலும் முன்னேற்றம் கண்டுள் ளனர்!
முதற்கட்டமாக Dementia 7 வகை தரம் Seven Point Rating Scale) என்று ஒரு புது முறை உடல் ரீதியாக (Biological).
முன்பு நோயின் தன்மை பற்றிய மதிப்பீடு தன்மையை குறிக்கும்போது Mild (லேசாக), Moderate (ஓரளவு கொடுமை கொடூரம்) and Severe கொடூரமாக என்ற முறைக்கு பதில் இப் போது மாற்றி, அந்த 7 தர அளவீட்டு முறை புகுந் துள்ளது!
அமெரிக்காவில் உள்ள பிரபல ரோச்செஸ்டர் நகரில் உள்ள மேயோ கிளினிக் (மினசோட்டா மாநிலம்) இதுபற்றிய ஆய்வை, அல்ஷைமர்ஸ் அசோசி யேஷன் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்கா போன்ற பல அமைப்புகளும் இதனை வரவேற்று மேலும் முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகள் நாளும் மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறார்கள்!
அல்ஷைமர்ஸ் என்ற கொடுமையான மறதி நோய்க்கான பிரபல சிகிச்சை நிபுணர் டாக்டர் மரியா காரில்லோ (Dr. Maria Corrillo) என்ற அறிவியல் நிபுணர், புதிய புதிய மருந்துகளையும் கண்டுபிடிக்க ஆய்வு தொடருகிறார்.
ஒரு கூடுதல் எச்சரிக்கை தகவல்:
இரவு 12 மணி தாண்டி 2 மணி அளவில் மூளை சுரக்கும் ஒருவித (Plague) பிளேக் தடுப்பான்கள் போல உருவாகி சிந்தனையை - மூளையின் ஆற்றலை வெகுவாக பாதிக்கும்.
இரவு 2 மணி அளவில் கண் விழிப்பவர்கள் அதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது!
பல செய்திகள் அச்செய்திக்குள் too technical ஆக உள்ளதால் துல்லியமாக என்னால் உங்க ளுக்கு விளங்கும்படியாக எழுத முடியவில்லை - பொறுத்தருள்க!
No comments:
Post a Comment