சென்னை, ஆக. 22 - சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை பெருநகர ஊர்க் காவல் படையில் சேர விருப்ப முடைய ஆண்கள் மற்றும் பெண் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது 18 முதல் 50 வரை
ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 10ஆ-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் கள் அல்லது தவறியவர்கள் விண் ணப்பிக்கலாம். குற்றப் பின்னணி இல்லாத, நன்னடத்தை உடையவர் களாக இருக்க வேண்டும். சென் னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். உணவுப் பங்கீட்டு அட்டை உடையவராக இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு 45 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர், அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உதவு வதற்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.
ரூ.560 சிறப்பு படி
சீருடை, தொப்பி மற்றும் காலணி ஆகியவை காவல் துறையால் வழங்கப் படும். இரவு ரோந்துப் பணி, பகல் ரோந்துப் பணி மற்றும் போக்குவரத்துப் பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும். பெண்களுக்கு பகல் ரோந்துப் பணி மட்டும் வழங்கப் படும்.
சிறப்பான முறையில் பணி புரிவோருக்கு தமிழ்நாடு முதல மைச்சர் பதக்கம் மற்றும்குடியரசுத் தலைவர் பதக்கம் ஆகியவை தகுதி களின் அடிப்படையில் வழங்கப் படும்.
தகுதி உள்ளவர்கள், "சென்னை ஊர்க்காவல் படை தலைமை அலு வலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை-_15 (தொலைபேசி: - 044 2345 2441/ 2442)" என்ற முகவரியில் விண்ணப்பப் படிவங்களை இலவசமாகப் பெற்று, அவற்றைப் பூர்த்தி செய்து, வரும் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். இவ்வாறு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment