கோவை, ஆக. 27- புதிய தொழில் முனைவோருக்கு 70 சதவீதம் கடன் உதவி வழங்கப்படும் என்று சிறப்பு தொழில் கடன் முகாமில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பேசினார்.
தமிழ்நாடு தொழில்முதலீட்டு கழகம் சார்பில் சிறப்பு தொழில் கடன் முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.8.2023) நடைபெற்றது.
தொழில் மய்ய பொது மேலாளர் முருகன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர் பேபி, கோவை கிளை மேலாளர் கீதா, கொடிசியா தலைவர் சிவ ஞானம், மேனாள் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், நிதி ஆலோசகர் வணங்காமுடி, காஸ்மோபேன் மற்றும் கொசிமா போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த வர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற் சாலைகளுக்கு கடன் வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடி யாக திகழ்கிறது.
தமிழ்நாடு அரசால் அங்கீகரிக் கப்பட்ட நிதி உதவிக் கடன் திட்டங்களான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் சேம்பி யன்ஸ் திட்டம் வாயிலாக நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும் ஒன்றிய- மாநில அரசுகளின் மானிய திட்டங்களை துரிதமாக செயல்படுத்தி வருகிறது.
முதலீட்டு கழகம் சார்பில் வருகிற 1-ஆம் தேதி வரை நடை பெறும் தொழில் கடன் விழா மூலம் அனைத்து விதமான தொழில் கடன்களும் வழங்கப் படும்.
மேலும் தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழ்நாடு அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் (அதிகபட் சம் ரூ.1.50 கோடி வரை மானியம்) நிதி உதவி வழங்கப் படுகிறது. முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப் பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மூலம் 5 முதல் 10 சதவீதம் முதலீடு செய்யும் தொழில்களுக்கு 25 சதவீதம் மானியமாகவும், 70 சதவீதம் கடன் உதவியும் வழங்கப்படுகிறது. 3 சதவீதம் வட்டியில் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.
அண்ணல் அம்பேத்கர் சேம்பியன்ஸ் திட்டம் மூலதனமின்றி வழங்கப்படும் 65 சதவீத கடனுத வியில் 35 சதவீதம் மானியமும்,
6 சதவீதம் வட்டியிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுபோல் எந்திர மூலதன கடன், விரைவுக் கடன், மருத்துவர் திட்டம், கார்ப்பரேட் கடன் திட்டம், கழகத்தின் முக்கிய வாடிக்கையாளர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மானியம், வட்டியில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், புதிய தொழில் முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment