மதுரைக்கான பெருமைகளுள் மிகச் சிறப்பானது கலைஞர் நூலகம்!
நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கிய அனைவருக்கும் நமது மனம் நிறைந்த பாராட்டுகள்!
ஆட்சி மாறினாலும், இந்நூலகத்தைக் காக்க இடிதாங்கிகளாக மக்களை உருவாக்குவோம்!
தந்தை பெரியார் சிந்தனை நூல்கள் இடம்பெற்றுள்ளன; மேலும் எங்கள் இயக்க வெளியீடுகளை வழங்குகிறோம்!
ஒன்றிய அரசின் ‘நவீன' குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒழிக்க நாடு தழுவிய அளவில் இயக்கம் நடத்துவோம்!
மதுரை, ஆக.19 முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவாக மதுரையில், தமிழ்நாடு அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள நூலகம் - மதுரையின் பெருமைகளுள் தலைசிறந்தது. மதுரை செல்பவர்கள் பார்த்து மகிழவேண்டிய கருவூலம் இது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.நேற்று (18.8.2023) மதுரைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்டார்; பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
இந்த மதுரை மாநகருக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு; ஆனால், அத்தனைப் பெருமைகளையும் தாண்டி, இன்றைக்குப் பெருமைக்குப் பெருமை சேர்க்கக் கூடிய அளவிற்கு, முத்தமிழ்ச் சங்கம், முச்சங்கம் இவற்றையெல்லாம் தாண்டி அறிவுக்கடல் - அந்த அறிவுக்கடலில் சங்கமிக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்பாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற இந்தப் பெருமை மதுரை மண்ணுக்குக் கிடைத்திருக்கிறது.
மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட மதுரை கலைஞர் நூலகம்!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே, ஏன் உலகளவிலே இல்லாத அளவிற்கு இவ்வளவு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மிக அருமையான ஒரு நூலகத்தை மிகச் சிறப்பான அளவிற்கு - வாய்ப்பு களை உருவாக்கித் தந்திருக்கின்றார் - நம்முடைய ‘திராவிட மாடல்' முதலமைச்சர், ஒப்பற்ற முதலமைச்சர், எல்லோருக்கும் வழிகாட்டக் கூடிய இணையற்ற முதலமைச்சர். அவரின் அயராத முயற்சியினாலும், பொதுப்பணித் துறையில் தன் முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கின்ற அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் இடையறா உழைப்பினாலும், மிகக் குறுகிய காலத்தில், மிக அருமையானதொரு நூலகம் இங்கே கிடைத் திருக்கிறது.
மதுரைக்குச் சென்றால் பார்க்கவேண்டியது கலைஞர் நூலகம்!
மதுரைக்குச் சென்று வந்தீர்களா? என்று கேட்கின்ற பொழுது, அடுத்த சொல், கலைஞர் நூற்றாண்டு நூலகம் பார்த்தீர்களா? என்று கேட்கக்கூடிய பெருமை இதற்குக் கிடைத்திருக்கிறது.
அறிவு, அறிவியல், பகுத்தறிவு, திராவிட இயக்க வரலாறு மட்டு மல்ல, தமிழ் மொழியினு டைய சிறப் பியல்புகள், செம்மொழி எம்மொழி என்பதில் மிகப்பெரிய பெருமையை உண் டாக்கி, அந்த செம்மொழித் தகு தியை நமக்குப் பெற்றுத் தந்த கலைஞர் அவர்களின் பெயரால் இந்த நூற்றாண்டு நூலகம் அமைந்திருக்கின் றது நவீன தொழில்நுட்பத் துடன்.
ஒரு நூலகம் திறந்தால், பல சிறைச்சாலைகளை மூடுவதற்கு அது சமம் என்ற ஒரு சொல்லாக்கம் உண்டு.
அந்த வகையில், மிகச் சிறப்பான இந்த நூல கத்தைப் பார்ப்பதற்கும், உங்களையெல்லாம் சந்திப் பதற்கும் இந்த மதுரை மாநகருக்கு வந்திருக்கின் றேன்.
நூலகத்தில் பணியாற்றக் கூடிய நூலகர்கள் மற்றவர் கள் ஓர் அர்ப்பணிப்பு உணர்வோடு கடமையைச் செய்வதில், எல்லையற்ற மகிழ்ச்சியைக் காணுகிறார்கள்.
‘‘கண்டேன் - வியந்தேன் - மகிழ்ந்தேன்!''
நாள்தோறும் இளம்பிள்ளைகள், எதிர்கால நாட்டை உருவாக்கக்கூடிய அந்த இளங்குருத்துகள் இங்கே சிறப்பாக தங்கள் அறிவை கூர்மைப்படுத்திக் கொண் டிருக்கின்றனர்.
இந்தக் காட்சியைப் பார்க்கும்பொழுது, இதைவிட மகிழ்ச்சி வேறு இருக்க முடியாது. ஏனென்றால், இன்றைய தலைமுறை எங்கோ போய்க் கொண்டிருக்கின்றது என்று நினைப்பதற்குப் பதிலாக - அது எங்கோ போக வில்லை - இங்கே நூலகத்திற்குத்தான் வந்து கொண் டிருக்கின்றது என்று - அவர்களைத் திசை திருப்பி, ஈர்க்கக்கூடிய அளவிற்கு அமைந்துள்ள நூலகத்தைக் கண்டேன் - வியந்தேன் - மகிழ்ந்தேன் எல்லாம் தேன், தேன் என்று இருக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது.
நூலகப் பணிகள் மேலும் தொடரும்!
எனவே, இந்நூலகத்தின் பணிகள் இன்னமும் முற்றுப் பெறவில்லை; அறிவிற்கு எல்லை இல்லை; நூலக வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி இல்லை. எல்லாமும் அரைப் புள்ளிதான்; ஆகவே, இது மேலும் வளரும் - ஆக்கத் தோடும், ஊக்கத்தோடும் இதனை குறுகிய காலத்தில் உருவாக்கி - சிறப்பாக நடத்திக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் வருகின்றனர்.
இந்தக் காலகட்டத்தில், குழந்தைகளுக்குப் பயன்படக் கூடிய அளவிற்கு வரக்கூடியதுதான் மிக முக்கிமானது.
ஏனென்றால், புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன் னதைப்போல, ‘‘இன்று குழந்தைகள் நீங்கள் - நாளை இந்த நாட்டை ஆளப் பிறந்தீர்கள்'' என்று சொல்லக்கூடிய வாய்ப்பை, நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றோம்.
ஆகவே, அந்தக் குழந்தைகளை எதிர்கால குடிமக் களாக, நல்ல குடிமக்களாக ஆக்கக்கூடிய வாய்ப்பை இன்றைக்கு இந்த அறிவின் கடல் தருகிறது.
இந்த நூலகம் ஒரு தனி உலகம்!
எனவே, நூலகத்தை நாம் ஒரு தனி உலகமாகப் பார்க்கிறோம். இங்கே உள்ளே நுழைந்துவிட்டால், ‘‘ஒரு தனி உலகத்திற்கு உள்ளே வந்திருக்கின்றோம்; அறி வுலகத்திற்கு வந்திருக்கின்றோம்; அறிவியல் உலகத் திலே நாம் நுழைந்து, நம்மை நாமே மறந்திருக்கின்றோம்'' என்ற அளவிற்கு இதனுடைய அழகு, இதனுடைய அறிவுச் செறிவு. இதனுடைய தொழில்நுட்பம், இதனு டைய வளர்ச்சியைப் பார்க்கும்பொழுது பெருமையாக இருக்கிறது.
எனவே, மதுரைக்குப் போனீர்களா? என்று கேட்கிறபொழுது, மதுரையில் இதுவரை எத்தனையோ இடங்கள் இருக்கலாம்; ஆனால், அவை எல்லா வற்றையும் தாண்டி, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பார்த்தீர்களா? அதனால் பயன் பெற்றீர்களா? என்று வினவுகின்ற அளவிற்கு முக்கிய நிலையில் இந்த நூலகம் உள்ளது. சில மணிநேரத்தில், சில மணித் துளிகள் ஆனாலும் - நூலகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்பொழுது, அறிவாளிகளாக, தமிழ் உணர் வாளர்களாக, திராவிடத்தை செம்மைப்படுத்தக் கூடிய வரலாற்றுத் துளிகளை அறிந்துகொள்ளக் கூடியவர் களாகத் திரும்புகின்றோம்.
எனவே, நூலகத்தை அர்ப்பணித்த, நூலகத்தை சிறப்பாக உருவாக்கிய முதலமைச்சர் முதற்கொண்டு, நூலகத்தில் உழைக்கக் கூடிய, கடைசி ஊழியராகத் தொண்டற உணர்வோடு இருக்கின்றவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.
‘‘இந்நாள் எனக்குப் பொன்னாள்!''
இது என் வாழ்க்கையில் ஒரு சிறந்த நாளாகும். ஏனென்றால், உலகத்திலுள்ள எந்த நாட்டிற்குச் சென் றாலும், அங்கே உள்ள நூலகத்தைத்தான் விரும்பிப் பார்ப்பது என்னுடைய வழக்கம். அந்த வகையில், இன்றைய நாள் ஒரு பொன்னாள்; இன்றைய நாள் மறக்க முடியாத நாளாகும்.
நூலகம் வளரும்; அதற்கு அடிப்படையே பெரி யாருடைய சிந்தனைதான். ஏனென்றால், ‘‘உலகு தொழும் மண்டைச் சுரப்பை'' என்று புரட்சிக்கவிஞர் சொன்னார். அவர்களுடைய நூல்களும், திராவிட வரலாற்றைக் கூறுகின்ற நூல்களும் ஏற்கெனவே இருக்கின்றன என்று கேள்விப்பட்டாலும், நாங்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய நூல்களில் ஒரு பகுதியை, அன்பின் அடையாளமாக, அறிவின் தெறிப்பாக இங்கே அளித்திருக்கின்றோம்.
இடிதாங்கிகளாக மக்களை உருவாக்குவோம்!
செய்தியாளர்: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கி இருக்கிறார்கள். தொடர்ந்து பல ஆண்டுகள் இருக்கவேண்டிய நூலகம். ஆட்சிகள் மாறினாலும், நூலகத்திற்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதுதான் மக்களுடைய விருப் பம். ஆனால், சென்னையில் உள்ள அண்ணா நூலகத் திற்கு ஏற்பட்ட நிலைமை, இந்நூலகத்திற்கு வராமல் இருப்பதற்கு, என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: இடிதாங்கிகளை நாம் அமைத்து, கட்டடங்களைப் பாதுகாக்கின்றோம். அதுபோல், அரசியல் இடிதாங்கிகளையும் அமைப்பதற்கு, நாங்கள் இடிதாங்கிகளாக மக்களை உருவாக்குவோம்.
மக்கள் சக்திக்கு முன், வேறு சக்திகள் தோற்கும். மக்கள் சக்தியை ஒன்று திரட்ட நாங்கள் உருவாக்குகின்ற பணி, பாதுகாப்புப் பணியாக இருக்கும்.
எனவேதான், இதற்குக் காவலர்கள் சட்டமோ, மற்றவையோ அல்ல; அரசியலோ, மற்றவையோ விளை யாட முடியாத அளவிற்குப் பாதுகாப்பாக, மக்கள்! மக்கள்!! மக்கள்!!! மக்களுக்கு அறிவு வந்திருக்கின்ற பொழுது, அதைத்தான் செய்வார்கள்.
அதேபோல, நூலகத்தைப் பொறுத்தவரையில், அது ஆபத்தானது என்று நினைப்பவர்கள் எல்லாம் எதேச்சதிகாரிகள்.
அலெக்சாண்டரியா நூலகத்தை எகிப்தில் எரித்த தைப்போல, ஈழத்தில், யாழ்ப்பாண நூலகத்தை எரித்த தைப்போல ஆகிவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.
பி.ஜே.பி. அரசின் குலக்கல்வித் திட்டம்!
நிச்சயமாக, அதற்கு மக்கள் பாதுகாப்பை உரு வாக்குவோம்; அப்பணியில் எங்களை நாங்கள் அர்ப் பணித்துக் கொள்வோம். அதுதான் நூலகத்திற்குப் பாதுகாப்பு.
இன்றைக்கு மிக முக்கியமான ஒரு செய்தி.
ஒன்றிய அரசு மீண்டும் இந்தியா முழுவதும் ஒரு குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இன் றைக்கு 140 கோடி மக்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள் என்று சொன்னால், அதில் 80 விழுக்காடு ஒடுக்கப்பட்ட மக்கள்; தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினராக இருக்கக் கூடிய ஒடுக்கப்பட்ட மக்கள்.
அந்த மக்கள் எல்லாம் இன்றைக்குப் பல்வேறு வகையினால், ஒரு பெரிய மாற்றம் அடைந்துள்ளனர். மனுதர்மத்தையோ, மற்றவற்றையோ பின்பற்றாமல், அதைத் தாண்டி, ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்ற சமூகநீதியைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந் திருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், வாய்ப்பற்ற மக்களுக் கெல்லாம் புதிதாக வாய்ப்புகள் இன்றைக்குக் கிடைத் திருக்கின்ற காலகட்டத்தில், மீண்டும் ‘விஸ்வகர்மா' என்ற ஒரு திட்டத்தை பிரதமர் மோடி, கடந்த 15 ஆம் தேதி அறிவித்திருக்கின்றார்.
அந்தத் திட்டம் என்னவென்று சொன்னால், குரு - சிஷ்யப் பாரம்பரியம் என்று சொல்லக்கூடிய குருகுலப் பாரம்பரியத்தை ஆரம்பித்து, அதில் 18 தொழில்களை அடையாளம் கண்டிருக்கின்றார்களாம்.
சலவைத் தொழிலாளியின் பிள்ளை, சலவைத் தொழிலைக் கற்கவேண்டும்.
சிரைப்பவருடைய பிள்ளை, சிரைக்கவேண்டும்.
தச்சு வேலை செய்பவரின் பிள்ளை, தச்சு வேலையை செய்யவேண்டும் என்று இப்படி 18 வகையான தொழில் களை முன்னிலைப்படுத்தி, ஆச்சாரியரால் (ராஜாஜி) 70 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டு, விரட்டி யடிக்கப்பட்ட குலக்கல்வித் திட்டம் - புதைகுழியிலிருந்து மீண்டும் எடுக்கப்பட்டு, அகில இந்தியா முழுமையும் கொண்டு வருவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
‘நீட்'டுக்குப் பிறகு மற்றொரு தாக்குதல்!
அதற்காக 13 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கின்றோம் என்று சொல்வதோடு மட்டுமல்ல, அப்படி வருகின்றவர்களுக்கு எப்படி மீனைப் பிடிப் பதற்குத் தூண்டிலில் நாக்குப் பூச்சியை வைத்திருப்பது போல, அல்லது மயக்க பிஸ்கெட்டுகளைக் கொடுப்பது போல, ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறோம்; இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கிறோம் - அவரவர்களுடைய குலத்தொழிலை செய்யுங்கள் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ஆபத்தான திட்டம் இப்பொழுது வந்திருக்கிறது.
30 லட்சம் பேருக்கு என்று முதற்கட்டமாக நாங்கள் தொடங்குவோம் என்று சொல்கிறார்கள்.
இதைத் தமிழ்நாடு வன்மையாகக் கண்டிக்கிறது. திராவிடர் கழகம் அத்துணை முற்போக்குக் கட்சி களையும் இணைத்துப் போராடும். இந்தத் திட்டத்தை மீண்டும் புதைக்குழிக்கே அனுப்பவேண்டும் - அந்தப் பழைய வரலாற்றை உருவாக்கவேண்டும்.
அனைத்து முற்போக்காளர்களும் ஒன்றிணைந்து இதனைத் தெளிவாகச் செய்யவேண்டும்.
ஏனென்றால், மீண்டும் ஜாதி உணர்ச்சியை உரு வாக்கி, அவர்களை மேலே படிக்கவிடாத அளவிற்கு ஆக்கி, இது கணினி யுகம் - பேசினாலே, பதிவு செய்து எழுத்தாக்கக் கூடிய யுகம். அப்படிப்பட்ட காலகட்டத்தில், அவர்களுக்குப் பொறியியல் அறிவோ, மருத்துவயியலோ கிடைக்காமல் செய்து - ஏற்கெனவே நீட் தேர்வு என்ற பெயரில் அதனை எடுத்துவிட்டார்கள். தற்போது புதிதாக இன்னொரு திட்டம் இங்கே உள்ளே நுழையக்கூடிய ஆபத்து வந்திருக்கிறது.
அந்த ஆபத்தை எதிர்த்து, ஒத்தக் கருத்துள்ளவர் களையெல்லாம் இணைத்து, ஒரு பெரிய அளவிற்கு எழுச்சி உருவாக்கவேண்டும்.
கல்வி - மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும், ஏன்?
நம்முடைய கல்விக் கொள்கை என்பது, அது மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு ஏன் வரவேண்டும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம் - இன்னொரு மிக முக்கியமான காரணமாக அமைகிறது.
எனவேதான், ஒத்திசைவுப் பட்டியல் என்ற கன் கரண்ட் லிஸ்ட்டில்கூட நமக்கு உரிமை உண்டு. நம்மை கேட்காமல், அதை செய்ய முடியாது.
அதற்காகத்தான் அவர்கள் என்ன செய்கிறார்கள்? 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கின்றோம்; ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறோம்; 2 லட்சம் ரூபாய் கொடுக்கிறோம் என்கிறார்கள். அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டால், என்னாகும்?
மீண்டும் செருப்புத் தைப்பவர் பிள்ளை, செருப்புத் தைக்கத்தான் போகவேண்டும்;
சிரைப்பவரின் பிள்ளை, சிரைக்கவேண்டும்;
மலம் எடுப்பவர் பிள்ளை, மலம் எடுக்கவேண்டும் என்று சொல்லுகின்ற அந்தக் குலத்தொழிலை உருவாக் கியிருக்கிறார்கள்.
அதற்கு ‘விஸ்வகர்மா' திட்டம் என்று ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில் பெயர் வைத்திருக்கிறார்கள்.
இது விஸ்வகர்மா திட்டமல்ல; ஜாதி விஷத்தைப் பரப்புகின்ற திட்டமாகும்.
எனவே, அதை வேரோடும், கருவோடும் சிதைக்கக் கூடிய அளவிற்கு, எல்லோரையும் ஆயத்தப்படுத்த வேண்டிய பணியை திராவிடர் கழகம் முன்னின்று நடத்தும்.
இது மக்கள் நலன் சார்ந்தது; இது கட்சி சார்ந்தது அல்ல; இது சமூகம் சார்ந்தது.
தமிழ்நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோள்!
சமூகநீதிக்கும், கல்வி வளர்ச்சிக்கும், முன்னேற்றத் திற்கும் மிகப்பெரிய தடையான ஒரு திட்டம்.
அந்தத் திட்டத்தை கருவிலேயே அழிப்பதற்கு நாம் உறுதி கொள்ளவேண்டும்; அதற்கு ஒத்தக் கருத்துள்ள வர்களையெல்லாம் அழைக்கவேண்டும்.
தமிழ்நாடு அரசுக்கு என்னுடைய வேண்டுகோள் - நிச்சயமாக முதலமைச்சர் அவர்கள் நாளையோ, மறுநாளோ இதற்கு ஒரு தெளிவான நிலையை எடுப்பார்கள்.
ஒருபோதும் இதனை தமிழ்நாடு ஒப்புக்கொள்ளாது. ஏனென்றால், ஏற்கெனவே ஒன்றிய அரசால் புகுத்தப்பட்டு இருக்கின்ற புதிய கல்விக் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ளாதவர்கள்.
அப்படி இருக்கின்ற நிலையில், இத்திட்டம் சமூகநீதிக்கு விரோதமானது. சமூகநீதி வேரில் வெந்நீரை ஊற்றக்கூடிய ஆபத்தானது; மீண்டும் ஜாதி, வர்ண தர்மத்தை உருவாக்கக் கூடிய ஆபத்தானது.
எனவே, ஜாதியை ஒழிக்கவேண்டும்; ஒரு பக்கத்தில், பிள்ளைகள் மத்தியில் ஜாதி உணர்ச்சியை உருவாக் குகிறார்கள்; அதனை ஒழிக்கவேண்டும் என்று சொல்லு கின்ற நேரத்தில்தான் இப்படிப்பட்ட ஓர் அறிவிப்பு.
திராவிடம் என்பது ஜாதியை அழிப்பது.
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்''
என்று குறள் பிறந்த நாட்டிலே, இந்த மண்ணிலே இருந்து நாங்கள் முழங்குகின்றோம்.
‘விஸ்வகர்மா' திட்ட எதிர்ப்பு இயக்கத்தை இந்திய அளவில் கொண்டு செல்வோம்!
மீண்டும் ஜாதி, ஜாதித் தொழில், குலத்தொழில், குலத்தொழில் கல்வி என்பன எந்த ரூபத்தில் நுழைந் தாலும், அதனைக் கடுமையாக எதிர்க்கின்ற இயக்கத்தை, நாடு தழுவிய அளவிலே, இந்தியா முழுவதும் பரவக் கூடிய அளவிற்குச் செய்வோம்.
இதுதான் எங்களின் இன்றைய முக்கியமான செய்தியாகும்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment