வைக்கம் பெரியார் நினைவக சீரமைப்புப் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

வைக்கம் பெரியார் நினைவக சீரமைப்புப் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கேரளாவில் வைக்கம் பகுதியில் பெரியார் நினைவகத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் தந்தை பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றி கண்டதன் நினைவாக, தமிழ்நாடு அரசு சார்பில் 70 சென்ட் பரப்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அருங்காட்சியகம், நூலகம், சிறுவர் விளையாட்டுப் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன. மேலும், அமர்ந்த நிலையில் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடம் மறுசீரமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அப்பணிகள் 7 மாதங்களுக்குள் முடிவடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment