சென்னை, ஆக.24 "தமிழ்நாடு அரசின் பொதுப் பாடத்திட்டத்தை எதிர்ப்பது ஆளுநரின் வரம்பு மீறிய செயலாகும். ஆளுநராக நியமனம் செய்தது முதற்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகிற தமிழ்நாடு ஆளுநரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத் தலைவராக ஓய்வு பெற்ற மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்களை நியமிக் கும் தமிழ்நாடு அரசின் பரிந் துரையை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியிருப்பது அவரது ஆணவப் போக்கை வெளிப் படுத்துகிறது. எந்த பிரச்சினை யிலும் அரசமைப்புச் சட்ட அதி கார வரம்புகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வரு கிறார். இதுவரை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 18-க்கும் மேற்பட்ட சட்ட மசோ தாக்களை அப்படியே ஆளுநர் கிடப்பில் போட்டு அலட் சியப் போக்குடன் செயல்பட்டு வருவது அவரது தமிழ்நாடு விரோ தப் போக்கை வெளிப்படுத்துகிறது. அதில் குறிப்பாக கூட்டுறவு சங்கங்களின் பதவிக் காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைப்பது, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட முக்கிய கோப்புகளை கையெழுத்து போடாமல் ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்திருப்பது கூட் டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும். நீட் தேர்வு திணிப்பை எதிர்த்து கடும் எதிர்ப்பு உருவான நிலையில் தான் அது குறித்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அங்கே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல் கலைக் கழகங்கள், கல்லூரிகளில் மாநில அரசின் பொது பாடத் திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. இந்த விவகாரம் குறித்து பல்கலைக் கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? உயர்கல்வித்துறை அமைச்சரின் ஆலோசனை இல்லாமல், தமிழ் நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக ஆளுநர் கடிதம் எழுதுவது அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும்.
தமிழ்நாடு அரசின் பொதுப் பாடத்திட்டத்தை எதிர்ப்பது ஆளுநரின் வரம்பு மீறிய செய லாகும். ஆளுநராக நியமனம் செய்தது முதற்கொண்டு தமிழ் நாடு அரசுக்கு எதிராகவும், அரச மைப்புச் சட்டத்துக்கு புறம்பாக வும் செயல்பட்டு வருகிற தமிழ்நாடு ஆளுநரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டு மென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment