அரியானாவில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் கவலை கொள்ளட்டும் பஞ்சாப் முதலமைச்சர் பதிலடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 27, 2023

அரியானாவில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் கவலை கொள்ளட்டும் பஞ்சாப் முதலமைச்சர் பதிலடி

சண்டிகர், ஆக. 27-  பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைப்பேன் என்று ஆளுநர் மிரட்டுகிறார். ஆனால் பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அமைதி காத்து வரு கின்றனர் என்று பஞ்சாப் முதல மைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் குடியரசுத் தலை வர் ஆட்சிக்கு பரிந்துரைப்பேன் என்று முதலமைச்சர் பகவந்த் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதி இருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் பக்வந்த் மான் சண்டிகரில் கூறியதாவது:

356ஆவது சட்டப்பிரிவு மற் றும் குடியரசுத் தலைவர் ஆட் சியை பரிந்துரைப்பேன் என்று ஆளுநர் கூறியுள்ளார்.  

ஆளுநர் எனக்கு 16 கடிதங்களை எழுதி இருக்கிறார். இதில் 9 கடிதங் களுக்கு பதில் அளிக்கப்பட்டு விட்டது. மற்ற கடிதங்கள் தகவல் களை பெறுவதற்காக காத்திருக் கிறது. ஆளுநர் அவசரமாக கடிதங் களை எழுதிவிட்டு உடனடியாக பதிலை எதிர்பார்க்கக்கூடாது.

ஆளுநரிடம் ஒன்று கேட்கிறேன்? அரியானாவின் நூஹ்வில் என்ன நடந்தது?

வகுப்புவாத மோதல்கள், வன்முறைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து அம்மாநில ஆளுநர் முதலமைச்சர் கட்டாருக்கு ஏதா வது தாக்கீது அனுப்பியிருக் கிறாரா? இல்லை. ஏனென்றால் அங்கு பா.ஜ. அரசு ஆட்சி செய் கிறது.

ஆனால், பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு குறித்து கவலைப்படுகிறார். இவ்வாறு கூறியுள்ளார். 

No comments:

Post a Comment