முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் தெலங்கானா மாநில அதிகாரிகள் குழு ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் தெலங்கானா மாநில அதிகாரிகள் குழு ஆய்வு


சென்னை, ஆக. 31
- தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த காலை உணவு திட்டம் கடந்த 25ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 31,008 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தால் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகளை தெலங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியின நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட அய்ந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிக்கு கொண்டு செல்லும் முறை மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும் விதத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

அந்த வகையில் சென்னை ராயபுரம் அய்சிசி பழைய பள்ளிக் கட்டடத்தில் உணவு தயாரிக்கும் முறையை பார்வையிட்ட அதிகாரிகள், ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவு பரிமாறப்படுவதை ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment