முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ‘தாய்வீட்டில் கலைஞர்' நூலை வெளியிடுகிறார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (9.8.2023) காலை 9.30 மணிக்கு அவரது முகாம் அலுவலகமான இல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சந்தித்து உரையாடியபோது, தஞ்சையில், மிகப்பெரிய அளவில் வருகிற அக்டோபர்முதல் வாரத்தில், தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்படவிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் வந்து கலந்துகொண்டு நிறைவுரையாற்றிட முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் இசைவு தந்தார்! மாலை நிகழ்வாக நடைபெறவுள்ள அவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தொகுத்துள்ள 1000 பக்கங்கள் கொண்ட ‘‘தாய்வீட்டில் கலைஞர்'' என்கிற புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். பல்வேறு அறிஞர் பெருமக்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.
அன்று காலையில் தஞ்சையில் வல்லம் பெரியார் - மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகம் சார்பில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கத்தில் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு, காலை முதல் முற்பகல் வரை மிகவும் சிறப்புடன் நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன!
மேற்கண்ட நிகழ்வுகள்பற்றியும், பொதுச் செய்திகள்பற்றியும் திராவிடர் கழகத் தலைவர் முதலமைச்சருடன் உரையாடித் திரும்பினார்.
No comments:
Post a Comment