ஈரோட்டில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவுநாள் - கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

ஈரோட்டில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவுநாள் - கருத்தரங்கம்


ஈரோடு, ஆக. 31
- ஈரோடு மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் சார்பில் 27.08.2023 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவுநாள் - அறிவியல் மனப்பான்மை விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ப.க.மாவட்ட தலை வர் கனிமொழி நடராஜன் தலைமை தாங்கினார்.மாவட்ட ப.க.பொறுப்பா ளர் பி.என்.எம்.பெரியசாமி வரவேற்பு ரையாற்றினார். 

பேராசிரியர் முனைவர் ப.காளி முத்து கலந்து கொண்டு சிறப்புரையாற் றினார். 

அவரது உரையில்,  "நரேந்திர தபோல்கர் சிறந்த பகுத்தறிவாளர்-மூட நம்பிக்கை மற்றும் இந்துத்துவ சக்தி களை எதிர்த்து அவரது எழுத்தும், பேச்சும், செயல்பாடும் இருந்த கார ணத்தால் மக்கள் செல்வாக்கு அவருக்கு அதிகரித்தது....அவரது செல்வாக்கை பிடிக்காத இந்துத்துவ - சனாதன சக்திகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

கூட்டத்திற்கு தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், ப.க. மாநில துணைத்தலைவர் தரும.வீரமணி, தி.மு.க.தலைமைக்கழகப் பேச் சாளார் ப.இளைய கோபால், மாவட்ட கழக செயலாளர் மணிமாறன், பொதுக் குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருஷ் ணன், கு.சிற்றரசு, மாநகராட்சி வார்டு கவுன்சிலர் மேனகா நடேசன், மாநகர தலைவர் கோ.திருநாவுக்கரசு, செயலா ளர் தே.காமராஜ், மாவட்ட துணைத் தலைவர் வீ.தேவராஜ், ப.சத்தியமூர்த்தி, தங்கராஜ், திராவிட இயக்க தமிழர் பேரவை தமிழ்க்குமரன், சேகர், சுந்தர மூர்த்தி, வீ.மா.ஆறுமுகம், பவானி அசோக் குமார், மாலதி பெரியசாமி, பா.ராகவன் பெ.மதிவாணன், கவிதா மணிமாறன், பெரியார் பிஞ்சு அருவி ஆகியோர் கலந்துகொண்டனர். 

இறுதியாக  பெரியார் படிப்பக வாசகர் வட்ட புரவலர் செல்வகுமார் நன்றிகூற கூட்டம் சிறப்புடன் முடி வடைந்தது.

ஈரோடுபெரியார் படிப்பக வாசகர் வட்ட புதிய நிர்வாகிகள்: தலைவர்: ராஜேந்திர பிரபு, செயலாளர் - ப. இளைய கோபால், பொருளாளர்-கனிமொழி நடராசன், புரவலர்கள்-பேரா.ப.காளிமுத்து, த.சண்முகம், பி.என்.எம்.பெரியசாமி, ஆசிரியர் செல்வகுமார்.

No comments:

Post a Comment