27.8.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉 பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்; திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் விதிகளை வகுக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉அதானி குழுமத்தின் ரவுண்ட் ட்ரிப்பிங் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் இயலாமை ஆழ்ந்த கவலைக்குரியது என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது என லாலு பிரசாத் குற்றச்சாட்டு.
தி இந்து:
👉உ.பி. முசாபர் நகரில் சக மாணவர்களை இஸ்லாமிய மாணவன் கன்னத்தில் அறை விட கூறிய ஆசிரியையின் நடவடிக்கை, பாஜக-ஆர் எஸ் எஸ்-ன் வெறுப்பு அரசிய லின் விளைவு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment