மதுரை,ஆக.9 - தமிழ்நாடு 80 சத வீதம் எழுத்தறிவு பெற்ற மாநில மாக திகழ்கிறது என்று எழுத்தறிவு திட்ட இயக்குநர் பழனிசாமி தெரிவித்தார்.
மதுரையில் பள்ளிக் கல்வித் துறையின் எழுத்தறிவு திட்ட இயக்குநர் மு.பழனிசாமி கூறியதாவது:
வயது வந்தோருக்கான எழுத் தறிவு திட்டம் அனைவரும் அடிப் படை எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் லட்சிய திட்டமாகும்.
2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி 15 வயதுக்கு மேற் பட்ட அனைவருக்கும் அடிப்படை கல்வி வழங்குவதே இதன் நோக்க மாகும். இதில் கடந்த கல்வி யாண்டில் தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் பயன டைந்துள்ளனர்.
இந்த கல்வியாண்டில் நிர்ணயித்த இலக்கான 4 கோடியே 80 லட்சத்தை கடந்துள்ளது. இவர்க ளுக்கான பயிற்சி அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது.
இதில் 40 வயதுக்கு மேற் பட்டோர் சேர்ந்து பயனடை கின்றனர். 20 பேருக்கு ஒரு தன் னார்வலர் என்ற அடிப்படை யில் அந்தந்த பகுதியில் உள்ள ஒரு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் மய்யம் அமைக் கப்பட்டுள்ளது.
மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை 2 மணி நேர அடிப்படையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது. மாதந் தோறும் 200 மணி நேரம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்காக தனிப் புத்தகம் தயாரிக்கப்பட்டு அதன்படி கற்றுத்தரப்படுகிறது. இதில் தமிழ் எழுத்துகள், எண், வாசிப்பு, வார்த்தை அமைப்பு, வாய்ப்பாடு ஆகியன கற்றுத் தரப் படுகிறது.
பின்னர் செயல் வழிக்கற்றல் அடிப்படையில் ஆதார் அட்டை பெறும் வழிமுறை, வங்கிகளில் விண்ணப்பம் பூர்த்தி செய்வது உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கற்றுத்தரப்படுகிறது. முடிவில், கற் றுத் தரப்படும் பாடங்களின் அடிப் படையில் எழுத்துக்கூட்டி படிப்பது, வாசிப்பது, வார்த்தை அமைப் பது, வார்த்தைகளை மாற்றி அமைத்து சரியான வார்த்தை அமைப்பது, எண் கணி தம் ஆகியவற்றில் அவர்களின் திறமை பரிசோதிக்கப்பட்டு சான் றிதழ் வழங்கப்படும்.
தற்போது தமிழ்நாடு 80 சத வீதம் எழுத்தறிவு பெற்ற மாநில மாக உள்ளது. இதனை 100 சத வீதம் எழுத்தறிவு பெற்ற மாநில மாக மாற்றுவதற்கான நடவடிக் கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. -இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment