குழந்தைகள் கல்வி முன்பணத் தொகை அரசு ஊழியர்களுக்கு 20 மடங்காக உயர்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

குழந்தைகள் கல்வி முன்பணத் தொகை அரசு ஊழியர்களுக்கு 20 மடங்காக உயர்வு!

தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை, ஆக. 31- தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கான கல்வி முன் பணம் தொகை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூன்று விதமான கல்லூரிகளுக்கு எவ்வளவு தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உயர்கல்விக்கு முன்பணம்!

முன்னதாக 13.06.1979இல் பிறப் பிக்கப்பட்ட அரசாணையின் படி கல்விக்கான முன்பணம் 1,000 ரூபாய் எனவும், பல்தொழில்நுட்ப கல்வி பயில்வதற்கு 500 ரூபாய் எனவும் முன்பணம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக வும், 500 ரூபாயில் இருந்து 750 ரூபாயாகவும் 01.12.1988இ-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணை வெளியிடப் பட்டு 30 ஆண்டுகள் கடந்து விட் டன. எனவே அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர் களது குழந்தைகள் கல்வி கற்க வழங்கப்பட்டு வந்த இந்த குறைந்த கல்வி முன்பணம் தமிழ்நாடு அர சால் தற்போது உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை ஆனது நடப்பு 2023 -_ 2024ஆம் கல்வியாண் டில் இருந்து வழங்கப்படும். அதே சமயம் சில நிபந்தனைகளும் விதிக் கப்பட்டுள்ளன.

இரண்டு நிபந்தனைகள்

தொகுதி ‘சி’ மற்றும் ‘டி’ ஊழியர் களுக்கு ஒரு மாத அடிப்படை சம் பளத்திற்கு சமமான தொகை அல் லது அதற்கு கீழே பரிந்துரைக்கப் பட்ட வரம்புகளில் எது அதிகமோ அந்த தொகை அனுமதிக்கப்படும்.

தொகுதி ‘ஏ’ மற்றும் ‘பி’ அலுவ லர்களுக்கு ஒரு மாத அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அந்த தொகை அனுமதிக்கப்படும்.

இதன்படி தொழில்முறை கல் விக்கு முன்பு ரூ.2500 வழங்கிய நிலையில் தற்போது ரூபாய் 50 ஆயிரம் வரையிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முன்பு ரூ.2000 வழங்கிய நிலையில் தற்போது ரூ.25,000 வரையிலும் பல் தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பு 1000 ரூபாய் வழங்கிய நிலையில் தற்போது 25,000 வரையிலும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment