மும்பை, ஆக. 25- மும்பை பகுத்தறிவா ளர் கழகம் சார்பாக "மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி" டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவுநாள் கூட்டம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவுநாள் கூட்டம் தாராவி கலைஞர் மாளிகையில் 20.8.2023 அன்று மாலை 7.30 மணிக்கு மும்பை பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.ரவிச்சந்திரன் தலை மையில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் வரவேற்பு ரையாற்ற, மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் படத்திற்கு முல்லுண்ட் பாலசுப்ரமணியம் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தோழர்கள், மும்பை திமுக மூத்த தலைவர் என்.வி. சண்முகராசன், பணகுடி சண்முகவேல், ஸ்டீபன், ராஜன், அலிமுகமது மற்றும் காரை.ரவீந் திரன் ,நல்லையகுமார் ,அ.சந்திர சேகர், சதானந்த, த.செ.குமார், அறிவுமலர், க.அறிவுமதி, செல்லப் பாண்டியன், நிலவன், குட்டிராஜா , சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராவி கிளைச் செயலாளர் ஞான.அய்யாபிள்ளை மனிதநேய இயக்க ஒருங்கிணைப்பாளர் சங்கர் டிராவிட், மும்பை திராவிடர் கழக பொருளாளர் அ.கண்ணன், அம் பேத்கர் இயக்க தாராவி ஒருங்கி ணைப்பாளர் ரமேஷ் ஜெய்ஸ்வால், ஜெய் பீம் பவுண்டேசன் தோழர் நித்தியானந்தம், தாராவி ஓட்டுனர் சங்க தலைவர் இரவி ரஜினி , மும்பை திராவிடர் கழக ஆற்றல் மிகு தோழர் பெரியார் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்து நினைவேந்தல் உரை ஆற்றினார் கள்
மும்பை இலெமூரியா அறக் கட்டளைத் தலைவர் சு.குமண ராசன் நினைவேந்தல் உரையாற் றினார்.
மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மறைந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண் டிருந்த நேரத்தில் பார்வையாளர் வரிசையில் இருந்த தோழர் பா. செல்லப் பாண்டியன் தன்னெழுச்சி யாக தனது கையில் பல ஆண்டு களாக அணிந்திருந்த கயிறை அகற்ற முன்வந்தார்.
இந்த நிலையில், நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய லெமூரிய அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் கத்திரிக்கோலால் இதை வெட்டி அகற்றினார். அந்த நேரத்தில் தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க! நரேந்திர தபோல் கர் வாழ்க! ஒழிப்போம் ஒழிப்போம் மூட நம்பிக்கையை ஒழிப்போம்! என்று முழக்கமிட்டனர் .
இறுதியில் மும்பை திராவிடர் கழகத்தின் செயலாளர் இ.அந் தோணி நன்றி கூற நினைவேந்தல் கூட்டம் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment